பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எமிலி ஜோலா நீதிமன்றம் குற்றக்கூண்டில் ஜோலா நிறுத்தப்பட்டிருக்கின்ருன். டிரைபசுக்காக வாதாடிய ஜோலா இன்று கூண்டில், ஜோலாவுக்காக வாதாட இன்று லபோரி நீதிமன்றத்தில் நிற்கிருர், லபோரி பிரபல வழக்கறிஞர். அவர் ஒருவர் தான் முன்வந்தார் ஜோலாவுக்காக வாதாட. அரோரி பத்திரிகையிலும், பிகாரோ பத்திரிகை யிலும், துண்டுத் தாள்கள் மூலமும் வெளிவந்த கட் டுரைகள் உன்னுடையவைதான என்று வக்கீல் கேட் கின்ருர். ஆம் என்று ஜோலா ஒப்புக்கொண்டு, அதற் காக இராணுவத்தினரால் ஏவப்பட்ட சில காலிகளால் கல்லடிபட்டவனும் நான்தான் என்று முடித்தார். பிறகு லபோரி தன் வாதத்தைத் தொடங்கினர். கனம் பொருந்திய நீதிபதி அவர்களே ! பிரெஞ்சுக் குடியரசின் தலைவர் அவர்களே ஜூரர்களே ! இந்த வழக்கில் ஜோலா குற்றவாளி அல்ல என்பது என் வாதம். ஏனெனில் இவர் தவிர நம் நாடு முழுதுமே டிரைபஸ் குற்றமுள்ளவன் என்கிறது. ஜோ லா ஒருவர்தான். 'டிரைபஸ் குற்றமற்றவன் ' என்கிருர், ஏன் ? சில உண் மைகள் அவருக்கு ஆதாரபூர்வமாகத் தெரிந்திருப்பதால். நீதிமன்றத்தில் ஒருவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் பேரில் சட்டத்தைக் குற்றம் சொல்ல யாருக்கும் உரிமை, இல்லை என்று தெரிந்தும் சொன்னது ஜோலாவின் குற். றம் என்பதுதான் அவர்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற் றம் ஆல்ை, ' நாட்டின் நடப்பிலே நன்மை தீமை களேச் சீர்தூக்கிப்பார்த்து எது சரி, எது தவறு என்று சொல்லலாம்," என்று குடியரசு சொல்வதை நீங்கள்' மறுத்துவிட முடியாது. பேச, எழுத, அனவர்க்குமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/45&oldid=759934" இலிருந்து மீள்விக்கப்பட்டது