பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 45 சுதந்திரம் உண்டு என்பதை ஒரு இராணுவ மன்றம் அழித்துவிட முடியாது. லகூோப லட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடிய சபையாரால் முடிவு செய்யப்பட்டு எல்லாருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டிருக்கும் உரி மையை, நாட்டின் பாதுகாப்புக்காக, அதுவும் இராணுவ நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகவே அமைக்கப்பட் டிருக்கும் இராணுவ நீதிமன்றம் அந்த உரிமையைப் பறித்திருக்கிறது. மேலும் ஜோலா சட்டஞானம் பெரு தவரல்ல. சட்டஞானத்தோடு நீதி மன்றத்தில் வழக் காட சன்னதும் பெற்றிருக்கின்ருர். பலமுறை நீதிமன் றத்தில் ஜூரியாகவும் இருந்திருக்கின்ருர். அவர் எழுத் துக்கள் மிக வல்லமை வாய்ந்தவை என்பதை எஸ்ட ரெஸியின் விசாரனேயே காட்டுகிறது. ஆகவே, ஜோலா தன் கருத்துக்களை வெளியிட்டது எவ்வகையிலும் குற்ற மாகாதெனத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நீதிமன்றத்தில் ஜோலா நீதியின் பாதுகாப்பாளரே! குடியரசின் தலைவரே' கண்ணியமிக்க ஜூரர்களே ! - டிரைபஸ் குற்றமற்றவன் என்ப்து என் சுயநலத்துக் காகவோ, நீதியறிந்தவர்களின் சுயநலத்துக்காகவோ, அல்லது நீதி ஒன்றிருக்கின்றது. ஆகையால் அதைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் நான்தான் என்ற கெர் வத்தாலோ, அல்லது அதை எடுத்துச் சொல்வதின் மூலம் ஏதாவது ஒரு அரசியல் வேட்ட்ை கிட்ைக்கும் என்ற பேராசையாலோ அல்ல. . . . . . . மாண்பு மிக்க தலைவரே நிதி ஒருவனுடைய நிழ. லில் மறைந்துவிடக் கூடாது. அப்படி அஞ்சி ஒடுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/46&oldid=759935" இலிருந்து மீள்விக்கப்பட்டது