பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 .ே முருகுசுந்தரம்

சூளுரைக்கேற்ப, நம் காலத்தின் மிகக் கடுமையான பிரச்சினை ஒன்றின் மீது, நம் காலத்துக் கவிஞர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். "அறிவுஜீவிகள் தங்களைத் தத்துவார்த்த அடிப்படையில் புத்துருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இது அவர்களது கடமை என்றும், அறிவு ஜீவிகள் நடை முறைப் போராட்டங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் இந்திக் கடமையை நிறைவேற்ற முடியும்' (மனித சமூக சாரம், ப.198) என்றும் மாவோ அறைகூவினார்! அந்த அறைகூவல் தமிழ்க் கவிஞர் வழியே ஒரு கவிதை நாடக உருவில் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது.

சர்வதேசியம்-தேசியம் இவை இன்னும் தெளிவுபடாத கூறுகளா? சர்வதேசியம் தேசிய்த்தை அடக்கி விடுகிறதா? ‘தேசியம்' என்பது சர்வதேசிய உணர்வுக்கு எதிரானதா கடந்த காலங்களின் விவாதங்களும், போராட்டங்களும் மேலும் மேலும் குழப்பங்களுக்கிடையிலேயே முடிந்துள்ளன. இதனிடையில் எத்தனை எத்தனை மானிடப் பலிகள் எத்தனை எத்தனைக் குருதிப் பெருக்கம்! சர்வதேசியம் என்னும் பெயரால் தேசியம் ஊனப்படுவதையோ தேசியம் என்னும் பெயரால் சர்வதேசியம் சிதைவுபடுவதையோ மானுடநேயப் படைப்பாளி ஒரு போதும் ஏற்கமாட்டான். சர்வதேசியமும்-தேசியமும் இணைந்து, பாரடா உன் மானிடப்பரப்பை என்று ஒன்றுபட்டுப் பார்க்கும் காலம் கனிந்து வராதா என்று ஏங்கிக் கிடக்கும் படைப்பாளி குருதிப்புனல் கொப்பளித்து ஒடுவதை-அதுவும் பெரும்பான்மை மக்களின் குருதியாய் அது இருந்து விடுவதை ஒரு போதும் ஏற்கமாட்டான். ஒரு மக்களாட்சி தேசத்தின் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் கொல்லப்படுவது எந்த அளவுக்குக் கொடுரமானதோ, அந்த அளவுக்கு மேல் கொடுமரனது-மன்னிக்க முடியாதது, அப்பாவிமக்களைக் கொன்று குவிப்பது. இந்தக் குருதிப் புனலில் கவிஞன் மக்களின் பக்கம் தான் நிற்கவேண்டும்! அப்படி நின்றுதான் இந்த நாடகத்தை ஆரம்பிக்கின்றார் கவிஞர். எந்த நியாயமான முகாந்திரமும் இல்லை பஞ்சாபி இளம்பெண் அம்ரிதா துன்பப்படுவதற்கு!

அடுத்தது. ஈழப் பிரச்சனை. இதுதான் நாடகத்தின் முக்கியமான மையக்கரு. அதனோடு தொடர்புடைய பாத்திரமாக இடம்பெறுகிறாள் வினா. தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது