பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எரிநட்சத்திரம்
மூன்றாம் பதிப்பின்முன்னுரை

இயல் இசை நாடகம்-முத்தமிழ் இன்றைய இயல்- புதினம்,சிறுகதை, கட்டுரை யென்று கிளைவிட்டுத் தழைத்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் யாழை மீட்டியவர்கள் விபுலானந்தர்; ஆபிரகாம் பண்டிதர்!

நரம்புகளைத் தடவி நல்லிசை வகுத்தோர் அருணாசலக் கவிராயர், கோபால கிருட்டின பாரதி.

இந்த நூற்றாண்டில் சில இளவேனிற் குயில்கள்; பாரதி, பாரதிதாசன், தேவி, தண்டபாணி தேசிகர் தூரன், திருச்சி பரதன்.

தமிழில்- அளவற்ற மேடை நாடகங்கள். அறிஞர் அண்ணா அதிலும் புரட்சி செய்தார்.

மனோன்மணீயம் என்னும் ஆலின் அடியில் சில விழுதுகள்.

எரிநட்சத்திரம்- இன்றைய நிதர்சனம்

இதைஇளங்கலைப்பட்டவகுப்புக்களுக்குப் பாடமாக ஏற்ற பாரதியார், மதுரை காமராசர் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு நன்றி.

சேலம் - 16. 1–7-2000 முருகுசுந்தரம்