பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

எல்லாம் தமிழ்


யில் இருந்த காய் இன்று உனக்காக ஆற்றில் தானே விழுந்து உன் கையில் ஏறியதோ? உன்மேல் அதற்கு அத்தனை காதலோ ?

காவலர் சத்தம் போடாமல் உள்ளே கிளுகிளுத்தனர்.

அரசே, நான் நீராடிக்கொண்டிருந்தேன் என்பதை என் ஆடையே உணர்த்தும். மாங்காய்க்காக மானத்தைப் பறி கொடுக்கும் இயல்பு என்னிடம் இல்லை. உண்மையைக் கூறிவிட்டேன். அறத்திற்கும் உண்மைக்கும் இடம் இருந்தால் என்மேல் சுமந்த பழி நீங்கட்டும் என்று சிறிது தைரியம் பெற்றுக் கூறினாள் அவள்.

அரசன் சில அமைச்சர்களை அழைத்துவரச் செய்தான். வேறு சில முதியவர்களையும் அழைத்தான். புலவர் சிலர் வந்தனர்.

ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவியது. அரண் மனை வாயிலில் பெருங் கூட்டம் கூடியது.

அரசன் அமைச்சர்களிடமும் பிறரிடமும் செய்தியைச் சொன்னான். “காவல் மரத்துக்கு இழுக்கு உண்டாக்குவதும் கடவுள் உருவத்தைச் சிதைப்பதும் கொடிய குற்றங்கள். பகைவர்கள் இம்மரத்தை அணுகலாம் என்று நினைப்பதற்கே அஞ்சுவார்கள். அதன் காயை இந்தப் பேதை மகள் பறித்து உண்டாள். இந்தக் குற்றம் மிகப் பெரிது. இன்று இதைக் கவனிக்காமல் விட்டால் காவல்மரத்தின் மதிப்பே போய்விடும். நம் குடியில் வழிவழி வந்த மன்னர் காவல் மரத்தைக் கண்ணில் மணிபோல, உடம்பில் உயிர்போலப் பாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/18&oldid=1528932" இலிருந்து மீள்விக்கப்பட்டது