பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நண்பர் நா.பா.' த. ஜெயகாந்தன் நண்பர்நா. பார்த்தசாரதி அமரராகி 18 ஆண்டுகள் சென்றது தெரியவில்லை. நா.பார்த்தசாரதி எப்போதும் போல் நம்முடன் தான் இருக்கிறார். தன் படைப்புகளின் மூலம் என்று மெய்யாகவே உணருகிறவன் என்ற படியினால் அவர் மறைவில் எனக்கு சோகம் ஏதும் இல்லை. ஆனாலும் அவரது குடும்பத்தார், சுற்றத்தார் தினசரி நெருங்கிப் பழகிய அனைவரும் இந்த 18 ஆண்டுக்காலத்தில் குறைந்த பட்சம் 18 முறையாவது அவரது பிரிவை உணர்ந்திருப்பார்கள் என்று என்னால் உணர முடிகிறது. ஒருவரின் பிரிவினால் நம் மனத்தில் சூழ்கிற சோகம், அவரைப் பற்றியநினைவுகளினால் மகிழ்ச்சிதரும் என்றால் அந்த மனிதர் மிக மிக நல்ல மனிதர் என்று அர்த்தம். அத்தகு மனிதரை மக்கள் இனம் மறப்பதே இல்லை. அவ்வாறு எனது நினைவில் வாழுகின்ற நா. பார்த்தசாரதி எனது எழுத்தால் ஈர்க்கப்பட்டு என்னைத் தனது நண்பராகக் கொண்டார். அவர் திருமால் மாதிரி பெரிய ஆகிருதி உள்ளவர் என்றாலும் பெண்மையும், நளினமும் மிகுந்தவர். இனிமையாகப் பேசுகின்ற சுந்தரபுருஷர். அவரது உருவமே என்னைக் கவர்ந்தது. அப்போது அவர் பசுமலையில் இருந்தார்.நான் மதுரைக்குச் சென்றபொழுது ஒரு கூட்டத்தில் சந்தித்து வீட்டிற்கு அழைத்துப் போய் விருந்து கொடுத்து உபசரித்தார். எனக்கு அய்யங்கார் வீட்டு சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். அது அவருக்குத் தெரிந்திருந்தது. அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் ஒரு வைஷ்ணவனை ஒரு வைஷ்ணவன்தான் அறிந்து கொள்வார் என்றார். நான் வைணவன் இல்லையே என்றேன். உங்கள் பெயர் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிறது என்று புரிந்து கொண்டதற்கு விளக்கம் தந்தார். "நான் பாதி வைஷ்ணவன்' என்றேன். என் தாய் வழி வைஷ்ணவம், என் தந்தை வழி சைவம். எங்கள் ஜாதியில் இந்த இரு பிரிவினருக்கும் கொள்வினை, கொடுப்பினை உண்டு. இப்போது சொல்லுங்கள்' என்றேன்.