பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது டாகியவழி, அவ் வுரனுடமை தோன்ருவகையில், பணிந்த மொழியால், தான் கூறக்கருதுவதைக் கூறிக் கருத்தை முற்றுவித்துக் கொள்ளும் வாய்மையும் கிாம்பியவள். எவ் வாற்ருலும், தலைமக்கட்கு அன்புவழி கிற்கும் இன்பம் எய் துவதொன்றனையே குறிக்கோளாகக் கொண்டு, அதற்கேற்ப வொழுகும் கடப்பாட்டினள் இத் தோழி என்பே மாயின், எஞ்சிய பிறவெல்லாம் எஞ்சாமற் கூறியவாரும். இக் கருத்துக்களெல்லாம் தோன்ற, ஆசிரியர் : தொல்காட்பியர், தலைமகட்கும் தோழிக்கும் உரிய கிழமையினைத் 'தாயத்தி னடையா வீயச் செல்லா, விவையிற் றங்கா வீற்றுக் கொளப்படா, எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம்" (பெ. 221) எனச் சிறப்பித்துள்ளார். இச் சிறப்பால், தலைவி யுறுப்புக்களையும், தோழி, தன்னுறுப்பாகக் கூறிய வழியும், அது குற்ற மாகாது அமையும் என்று மொழிக் திருக்கின்றனர். எனச் சான்ருேர்களும் இதனை வலியுறுப் பார் போல, இந்நெறியே புலனெறிவழக்கமும் செய்திருக் கின்றனர். இயல்பாய் உளதாகிய ஆன்மவறிவினைச் செயற் கையாய் உளதாகும் கல்வியறிவு பண்படுத்தி உண்மையறி வாக்குவது போல, தலைமகள்பால் தோழி அறிவுநெறியே கின்று அவள் வாழ்க்கையை அறவாழ்க்கை யாக்கும் அமைதி கொண்டவள். சுருங்கச் சொல்லின், தோ ழி ш п єш т єї , அறிவே பெண்ணுருக் கொண்டு வந்தாற் போலும் பெருமை யுடையவள் என்று சொல்லுவது மிகையாகாது. இனி, இக் கூறிய அனைத்தையும் வற்புறுத்தற்பொருட் டுச் சான்ருேர் மொழிந்துள்ளன வாகிய பொருளுரைகள். பலவற்றையும் ஈண்டுக் காட்டலுறின், இம் முன்னுரை மிகவிரியு மென் றஞ்சி விடுத்து மேற்செல்லுகின்ரும். இனி, கேட்போர் பொருளாகத் தொகுத்த பத்தின்கட் கூறப்பட்ட தோழி, கேட்போர் திறத்துச் சிறப்புடையாரும், இல்லாரும், இல்லனவும் எனப் பலரோடும் ஒருங்குவைத்து எண்ணப்படும் இயைபுடைய ளாதலின், அவள் இயல்பினே,