பக்கம்:ஐந்திணை வளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'செல்வம் என்பது, சிந்தையின் நிறைவே' என்று சொல்வார்கள் சான்றோர்கள். வாழ்க்கையின் பல கூறுகளையும் ஆர அமர ஆராய்ந்து பாத்தோமானால், இந்த உண்மையின் செறிவுநமக்குத் தெளிவாகப் புலனாகும். - சிந்தையின் நிறைவே செல்வம் என்பதனால், சிந்தையின் நிறைவுக்கு ஊறு விளைவிப்பன அனைத்தும் செல்வமன்று என்றாகின்றது. சிந்தையது நினைவுக்கு வேண்டிய செயல்களை மேற்கொள்வதே செல்வத்தைத் தேடுதல் என்பது ஆகின்றது. இதனால், நாம் செல்வம் என்றதும் பொன்னையும், பொருளையும் கருதத் தொடங்கி விடாமல், சிந்தைக்கு நிறைவு தரும் ஆன்மவளத்தையே கருத வேண்டியவர்கள் ஆகின்றோம். வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களும், அவை நமக்கு மனநிறைவினைத் தருவனவாக அமையும்பொழுது அளப்பரிய செல்வமாகவே நிலைபெறுகின்றன. இவற்றுள் வாழ்க்கைக்கு உறுதிசேர்ப்பனவற்றைச்செல்வமெனவும், ஊறு விளைவிப்பன வற்றை வறுமை எனவும் பெரியோர் கொள்வார்கள். அறிவுடைமையிலும், தெளிவும் செப்பமும் கூர்மையும் உடையதான சிறப்பினை அறிவுச்செல்வம் என்றுதான் நாம் கூறுகின்றோம். இப்படிச்செல்வம் என்ற சொல்லானது, மனித வாழ்விற்கு நலந்தரும் பல்வேறு நிலைகளையும் வளங்களையும் உள்ளடக்கிய ஒரு செறிவுடைய சொல்லாகவே விளங்குகின்றது. 'ஐந்திணை வளம் என்கின்ற இந்த நூலும் ஒரு சிறந்த செல்வமே ஆகும். ‘அன்பின் ஐந்திணை' என ஆன்றோர் வகுத்துரைத்த ஒழுகலாறுகளையும், அந்த ஒழுக்கத்தேஈடுபட்டு இன்ப துன்பங்கட்கு உட்படுகின்ற தலைவன் தலைவியரது தகைமைகளையும் இது நமக்கு உணர்த்துகின்றது. இதன்மூலம் குறிஞ்சிமுல்லை மருதம் நெய்தல் பாலை என்கின்ற ஐந்திணைக் கூறுபாடுகளையும் நாம் தெளிவாக அறிந்து, மனநிறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/9&oldid=761895" இலிருந்து மீள்விக்கப்பட்டது