பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு 8?

கும் பகை இல்லை. அப்படி இருந்தாலும் தன்னுடைய அன்பு மிகுதியாலே ஏதாவது ஒரு சிறு சத்தம் கேட்டாலும் தன் குழந்தைக்கு ஏதேனும் ஊறுபாடு வருமோ என்று அஞ்சுகிருள் அவள். தன் கைக்கு அடங்காத விற்பிடி மாணிக்கத்தைப் பெற்றவன் அது கல்ல பாதுகாப்பில் இருந்தும், காற்று அசைந்தாலும் அதற்கு ஏதாவது தீங்கு வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிருன். அப் படியே சேந்த்னரும் அஞ்சிப் பல்லாண்டு கூறுகிருர்.

மன்னுக தில்கல வளர்கநம் பத்தர்கள்!

வஞ்சகர் போய் அகல! பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனினல் லாம்விளங்க அன்ன நடைமட வாள் உமை கோன்அடி

யோமுக்கு அருள்புரிந்து - பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த

பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. (தில்லை கிலேபெற்று வாழ்க! நம் உறவினர்களாகிய பக்தர் கள் மேன்மேலும் வளர்க! வஞ்சகர்கள் எம்மிடத்தினின்றும் நீங்கிப் போகட்டும்! அன்னம் போன்ற கடையை உடைய உமா தேவியின் கணவன், பொன்னல் இனியதாக உள்ள பொன்னம் பலமாகிய மண்டபத்தினுள்ளே எழுந்தருளி, உலகமெல்லாம் இருள் நீங்கி விளக்கம் பெற, அடியார்களாகிய நமக்கு அருள் புரிந்து, இக் தப் பிறவிக்குப் பின்னே வேறு பிறவி வராமல் அறுக்கும்படியாக ஒரு கல்ல வழியை எமக்குக் கைப்படுத்தித் தந்த பித்தனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துவோம்.

மன்னுக - கிலேபெறுக, கம் என்றது பக்தியோடு தொடர் புடையதல்ல; நமக்கு உறவினரான பக்தர்கள் என்று பொருள் கொள்க. அகல-அகல்க; வியங்கோள். பொன் செய் மண்டபம், இன் மண்டபம் என்று கூட்ட வேண்டும். அன்ன கடை மடவாள் உமைகோளுகிய பித்தன் என்று சேர்க்கவேண்டும். 'பெற்றலும் பிறந்தேன், இனிப் பிறவாத தன்மைவங் தெய்தினேன்’’ என்று சுந்தார் சொன்னதுபோல, இப்பிறவியி ல்ை பெற்ற துன்பம் இருப்பினும் இனிப் பிறவி இல்லை' என்ற துணிவு கொண்டு பேசுகிருர். பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே