பக்கம்:கண்ணகிக் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




தமிழ் ஓங்குக !

க ண் ண கி க தை

----------

இறைவணக்கம்

தேனூறும் தமிழெனவே தெளிநிலவைப் பொழிமதியே !
வானோரும் புகழ்வளவன் குடையெனநீ வழங்கிடுவாய் ;
வையகத்துப் பேரொளியே வானொளிரும் கதிரோனே !
செய்யதிருச் சோழன்தன் திகிரியெனத் திகழ்ந்திடுவாய் ; இன்னமுத மாமழையே! மன்னுயிர்க்கும் இன்னுயிரே !
மன்னுகா விரிநாடன் இன்னருளைப் போன் றொளிர்வாய்; தண்மதியே வெங்கதிரே தனிமழையே செஞ்சடையெம் விண்ணவனாம் கண்ணுதலின் விழிகளெனச் சடையென்ன விளங்கிடுவீர் வழியுரைப்பான்! வியனுலகம் தழைத்திடவே உளங்கொண்டு வணங்கினம்யாம் உயரருளைப் புரிந்திடுவீர் ; அனைத்திற்கும் ஆதியாம் இனித்தசுவைப் பரம்பொருளே! தனித்தபெருங் காவியமாம் தமிழன்னை யடிச்சிலம்பாம் முத்தமிழும் புத்தமுதா மொய்த்திலங்கும் சித்திரமா
வித்தகர்க்கு நல்விருந்தாம் வேந்தர்களுக் காரமுதாம் உள்ளமெலாம் கொள்ளைகொள்ளும் தெள்ளுதமிழ்த் தீங்கதையாம் வள்ளல் இளங் கோவளித்த வற்றாத தேனுாற்றாம்
சிலப்பதி காரமெனும் செந்தமிழின் நன்னிதியை
உலப்பில் புகழ்படைத்த உயர்வுடைய பெருங்கதையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/6&oldid=1296586" இலிருந்து மீள்விக்கப்பட்டது