பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை செங்கோட்டு வெற்பனை என்று திருச்செங்கோட்டை நினைக்கிறார். திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளி இருக்கும் முருகனை என்பது பொருள். செங்கோட்டு வேலன் அங்கே அந்தப் பெருமானுடைய திருக்கரத்தில் வேல் இருக் கிறது. அலங்காரம் பண்ணும்போது சாத்தும் வேல் அன்று; இயல் பாகவே திருவுருவத்தோடு ஒட்டியுள்ளது. அதனால் செங்கோட்டு வேலன் என்று வழங்கும் வழக்கம் இருப்பதை முன்பும் நினைப் பூட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால் செங்கோட்டு வெற்பனை, செஞ்சுடர் வேல் வேந்தனை என்று சொன்னார். சிவந்த சுடர் வீசுகின்ற வேலைத் திருக்கரத்தில் பிடித்தவன் அவன். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும், பொருள் களுக்கும் அரசனாக இருக்கிறவன். செந்தமிழ் நூல் விரித்தோன் பிறகு, செந்தமிழ் நூல் விரித்தோனை என்கிறார். அருணகிரியார் வெறும் பக்தர் மாத்திரம் அல்லர். பெரும் புலவர். ஆகவே புலவர் உலகத்திற்கும் புலப்படும்படி யாக ஓர் அடையாளம் சொல்கிறார். முருகன் செந்தமிழ் நூலை விரித்தானாம். அகத்தியருக்கு முருகப் பெருமான் இலக்கணம் சொன்னார் என்பதை முன்பு சில முறை பார்த்திருக்கிறோம். சிவபெருமானிடத்தில் ஒரளவு தமிழைப் பாடம் கேட்ட அகத்தி யனார், தமிழ்நாட்டுக்கு வந்து இங்கே நிலை கொள்ள எண்ணிய போது இந்த நாட்டுக்குரிய மொழியில் சிறந்த புலமை பெற வேண்டும் என்று எண்ணினார். சிறந்த புலமையாவது பல நூல்களைக் கற்பதோடு நிற்காமல் தாமே நூல்களை இயற்றும் ஆற்றல் பெறுவதுதான். இலக்கியம் இயற்றுவதைவிட இலக்கண நூல் இயற்றுவதற்குப் பெரிய புலமை வேண்டும். அகத்தியனார் அத்தகைய புலமை தமக்கு வேண்டும் என்று விரும்பினார். 139