பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் உடம்பு உள்ள போதே ஏழுலகம் கடந்த எல்லையில் அது இல்லை. இந்த உடம்பை விட்டுச் சென்ற பிறகு ஏதோ குறிப்பிட்ட இடத்தில் மோட்சம் இருக்கிறதென்று சொல்வது தவறு. நம்முடைய சமயத்தில் அப்படிச் சொல்வது இல்லை. இந்த உடம்பில் இருக்கும்போதே இறைவனுடைய திருவருள் இன்பத்தை முற்றும் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடம்பை விட்டுப் போன பிறகு எந்த முக்தி இன்பத்தை அடைகிறோமோ அந்த இன்பத்தின் சுவையை இந்த உடம்பில் இருக்கும் போதே பெற லாம். இரண்டுக்கும் வேறுபாடு என்ன? புளியம்பழம் நன்றாகக் கனிந்து ஒட்டோடு ஒட்டாமல் இருப்பது போல, உயிர் உடம்பில் இருந்தும் கருவி கரணங்களால் உண்டாகும் உணர்ச்சியோடு தொடர்பு பெறாமல் இருக்கும். இந்த உடம்பைவிட்டுப் போனால் மீட்டும் உடம்பு எடுக்காத நெறியில் சென்று இன்புறும். இந்த இரண்டு வகையையும் முக்தி என்றே சொல்வார்கள். உடம்பில் இருக்கும்போதே இந்திரியங்களின் தொடர்பை விட்டு மனத்தை அறுத்து இன்பத்தைப் பெறுவதை ஜீவன் முக்தி நிலை என்பார் கள். இந்த உடம்பில் இருக்கும் போதே அத்தகைய இன்பம் வருவது சாத்தியம் என்பதை அநுபவித்தவர்கள் சொல்லியிருக் கிறார்கள். ஜீவன் முக்தரும் பிறரும் ஜீவன் முக்தர்கள் மற்றவர்களைப் போலத்தான் கரசரணாதி அவயங்களுடன் இருப்பவர்கள். ஆனாலும் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு உண்டு. நெல்லை வாணலியில் இட்டு மணலைப் போட்டு வறுத்தால் நன்றாக வறுபடும். பொரியா வதற்கு முன்னாலே ஓரளவு நன்றாகச் சூடு ஏறும்படி வறுத்து எடுத்தால் கறுப்பாக ஆகாது. அது நெல் போலவே தோன்றும். அந்த நிலையில் வறுத்த நெல்லுக்கும், வறுக்காத நெல்லுக்கும் வேறுபாடு கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக வேறு பாடு உண்டு. வறுத்த நெல் முளைக்காது. அதுபோல் ஜீவன்முக்த நிலையில் இந்த உடம்பில் வாழ்கிறவர்களுக்கும், மற்றவர் களுக்கும் வேறுபாடு உண்டு. ஞானாக்கினியினால் நன்றாக வறுக்கப் பட்டவர்கள் இரு வினையினின்றும் நீங்கி ஜீவன் முக்தி நிலையை 217