பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அடைவார்கள். அவர்கள் வேறு உடம்பை எடுக்கமாட்டார்கள் அவர்கள் மற்ற மக்களைப் போலவே வாழ்வார்கள். உணவு உண்பார்கள். உடை அணிவார்கள். இந்த உடம்பை விட்டுச் சென்றால் மீண்டும் பிறவி எடுக்கின்ற நிலை அவர்களுக்கு இல்லை. பிறவித் துன்பத்தினின்றும் நீங்கினவர்கள் அவர்கள் மற்றவர்களோ இந்த உடம்பினின்றும் நீங்குவது மறுபடியும் வேறு உடம்பை எடுத்து, இன்ப துன்பங்களை அடைவதற்குத்தான். மனிதன் வாழும்போது இந்த உடம்பிலேயே ஜீவன் முக்தி நிலையை அடையலாம் என்று காட்டிய சமயம் நம் சமயம், ஆன்மா உடம்பாகிய சிறைக்குள் இருக்கும்போதே மனத்தின் கட்டுக்களை அறுத்து எறிந்து இன்பத்தை அடையலாம் என்றும், அதுவே ஜீவன் முத்தி என்றும் சொல்வார்கள். உடம்பைவிட்டுச் சென்று அடைகிற முக்திக்கு விதேஹமுத்தி என்று பெயர். ஜீவன் முத்தி நிலையை இராப்பகல் அற்ற இடம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அருணகிரியார் இங்கே அதைச் சொல்கிறார். இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை. அப்படி ஒரு நிலை கிடைப்பது மிகவும் அரிய செயல். அதற்கு முன் பல முயற்சிகள் செய்து இறைவன் திருவருளால் அந்த நிலையை அடையவேண்டும். ஆதலின் ஜீவன் முக்தி நிலையை ஒருவன் பெறுவது எளிய காரியம் அன்று என்று சொல்கிறார். இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே. அந்த நிலையில் இரவு இல்லை; பகலும் இல்லை. ஒரே இன்பமயமாக இருக்கும். அதற்கு வழி என்ன என்பதை இந்தப் பாட்டில் சொல்கிறார். அதற்கு முதல்படி இறைவன் திருவருள். இரண்டாவது படி அந்த அருளினால் வருகிற அன்பு. மூன்றாவது படி இந்திரிய நிக்கிரகம். நான்காவது படி மனத்தின் பதைப்பு அறுதல். அப் போது மனம் தன்னுடைய சலனத்தை நீத்து அலையற்று அடங் கிய கடல்போல இருக்கும். படிப்படியாக இவற்றைச் சொல்லா மல் ஒரே வார்த்தையில் இராப்பகல் அற்ற இடத்தில் இருத்தல் 218