பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உள்ளத்தில் தைரியம் தோன்றச் செய்கின்ற தியானத்தை உறுதிப் படுத்தவேண்டும். அதற்குரிய பாடல் இது. தாரா கணம்எனும் தாய்மார் அறுவர் தரும்முலைப்பால் ஆராதுமைமுலைப் பால் உண்ட பாலன் அரையில்கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும்என் சிந்தையவே; வாரா தகல் அந்த கா:வந்த போதுயிர் வாங்குவனே. (யமனே நட்சத்திரக் கூட்டம் என்று சொல்லும் கிருத்திகை மாதர்களாகிய அன்னைமார் அறுவர் தரும் முலைப்பால் போதாமல், உமாதேவியின் திருமுலைப்பாலையும் உண்ட குழந்தையாகிய முருகப் பெருமான் தன் இடையிலே கட்டும் உடைய வாளும் கையில் வைத் திருக்கும் சிறிய வாளும் அவனுடைய வேலாயுதமும் என் சிந்தையிலே உள்ளன; நீ என்னிடம் வாராமல் சேய்மையிலே அகன்று செல்வாயாக! அவ்வாறு இன்றி என்பால் வந்தால் அப்போது அந்தப் படைக் கலங்களின் வலிமையால் உன் உயிரை வாங்குவேன். தாரா - நட்சத்திரம். கணம் - இனம்; இங்கே கூட்டம். அறுவர் - கிருத்திகைப் பெண்கள். ஆராது - நிரம்பாமல், அரையில் - இடையில், சீரா - உடைவாள். என் சிந்ததையில் இருக்கின்றன; ஆதலின் அவற்றால் உன் உயிரை வாங்குவேன் என்றபடி. மனத்தினால் ஒருமைப்பாட்டுடன் செய்யும் தியானம் மரண பயத்தைப் போக்கி உறுதியைப் பயக்கும் என்பது கருத்து.) இந்த கந்தர் அலங்காரத்தில் 81 ஆம் பாடல். 352