பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஒப்பு நோக்குதல் ஏதேனும் ஒரு பொருளின் உயர்வு தாழ்வைத் தனியே பார்ப்பதைக் காட்டிலும் வேறு ஒன்றை அருதில் வைத்துப் பார்த்தால் அதன் இயல்பு நன்றாகத் தெரியும். இலக்கணத்தில் தவறான கேள்வி என்று ஒன்று வருகிறது. ஒரு. ೧೦೧ುತ್ತ காட்டிப் பெரிதோ, சிறிதோ என்று கேட்பது தவறு என்று சொல்வார்கள். இரண்டு பொருள்களை வைத்தால்தான் இன்னது பெரிது, இன்னது சிறிது என்று தெரியவரும். மிகப் பெரிய வடிவத்தின் பரிமாணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு அருகில் ஒரு சிறிய உருவத்தை வைத்துப் படம் பிடிப்பார்கள். பெரிய யானையின் திருவுருவம் கல்லால் மகாபலிபுரத்தில் இருக்கிறது. அதைத் தனியே படம் எடுத்துப் பார்த்தால் அதன் பரிமாணத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது. அதன் அருகில் ஓர் ஆட்டுக் குட்டியை நிற்கச் செய்து படம் எடுத்தால் கல் யானையினுடைய பெரிய அளவு நன்றாகத் தெரியும். இவ்வாறு ஒப்புநோக்குவதனால் பொருள் களின் திறம் நன்றாகத் தெரியவரும். இங்கே முருகப் பெரு மானுடைய கிண்கிணி ஓசையையும், கண்ணபிரானுடைய சங்கத் தின் நாதத்தையும் ஒப்பு நோக்குகிறார் அருணகிரியார். மாமா வையும், மருகனையும் ஒருங்கே வைத்துப் பார்க்கிற கலையில் அருணகிரிநாதர் வல்லவர். முருகனுடைய சிற்றடியைச் சொல்ல வந்தவர் முன்பு ஒரு பாட்டில் திருமாலினுடைய பேரடியைப் பற்றியும் சொன்னார். "தாவடி யோட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என் பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று முதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.' அந்த வகையில் முருகப்பெருமானுடைய திருவரைக் கிண்கிணி ஓசையையும், திருமாலினுடைய வலம்புரி ஓசையையும் இங்கே ஒப்புநோக்குகிறார். முருகன் சின்னஞ்சிறு வடிவம் உடையவன். இளமை மாறாப் பேரெழில் உடையவன். திருவரையில் அவன் கிண்கிணியை அணிந்திருக்கிறான். துள்ளித் துள்ளி அவன் விளையாடும்போது அது ஒலிக்கிறது. அந்த ஒலியினால் தேவர்கள் மகிழ்கிறார்கள். 2O2