பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அதிகமாக அதிகமாக நாம் இன்னும் தெளிவு பெறவில்லையே என்ற ஏக்கம் இருக்க வேண்டும். தெளிவு பெற்றவர்களோ இந்து தெளிவு இருந்தும் இன்னும் முயற்சி பண்ணவில்லையே என். ஏக்கத்தைப் பெறுவார்கள். கேள்வியினால் அநுபவம் வந்துவிடாது. சிந்தித்துத் தெளிய வேண்டும். தெளிவுக்குப் பிறகு அநுபவம் பெற வேண்டுமானால் நிட்டை கூட வேண்டும். பலபல பொருள்களை வாங்கி எடுத்து கொண்டு தெருத்தெருவாகச் சென்று விற்று, அதனால் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து பாதி ராத்திரியில் யாரும் இல்லாத வேளையில் எண்ணிப் பார்த்து, தன் பெட்டியில் வைத்துப் பூட்டுகிறான் வியாபாரி. வீதியில் வியாபாரம் பண்ணினோமே, அந்தப் பணத்தை வீதியில் எண்ணிப் பார்க்கலாம்' என்று யாரும் எண்ணமாட்டார்கள். வியாபாரம் நாலு பேருக்கு தெரியப் பண்ணினாலும், அதன் பயனாகிய பணம் தனிமையில் எண்ணிப் பார்த்து மகிழ்வதற்குரியது. அப்படித்தான் கல்வி, கேள்வி ஆகி யவை சத்சங்கத்தினாலும், பெரியவர்களுடைய தொடர்பினாலும் உண்டாவன. ஆனால் சிந்தனையும் தெளிவும் அநுபவமும் தனித்து நின்று பெறுவதற்குரியவை. சார்பின் பயன் கல்வி கற்றவர்கள் அந்தக் கல்வியினால் அநுபவம் பெற்ற தாக எண்ணுவது ஏமாற்றம் என்று சொன்னேன். அதுபோலத்தான் கேள்வி கேட்டவர்களும் அந்தக் கேள்வி அளவில் அநுபவம் வந்துவிட்டதாக ஏமாறுவதும் உண்டு. பெரியவர்களிடையே சேர்ந்து இருந்தால் மாத்திரம் ஒருவனுக்கு எல்லாம் வந்துவிடாது. அவருடைய சார்பு இருக்கிறவரைக்கும் மனம் உயர்ந்த நிலையில் இருக்கும். அவ்வளவுதான். மங்கைப் பருவம் வராத பெண் ணுக்கு அந்தப் பருவம் வந்த பெண்களோடு பழகினால் அவர்கள் பேசுகின்ற பல இரகசியங்கள் தெரியலாம். ஆனால் அவற்றின் உண்மையை அநுபவித்துப் பார்க்கின்ற ஆற்றல் அவளுக்கு இல்லை. சத்சங்கத்தில் பழகுகிறவர்களுக்கு ஒரு நிலைவரைக்கும் மனம் உயர்ந்து வரும். அப்பால் அநுபவ உலகம் அவர்களுக்கு விளங்கவே விளங்கா. அநுபவிகளுடன் பழகுவதனால் அநுபவத் திற்குரிய பொருள் ஒன்று உண்டு என்று தெரியுமேயன்றி 256