பக்கம்:கனவுப்பாலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி. 25 நோன் அங்கே வரட்டுமா?’ அயாகோவின் குரல் துக்கத்தில் உறைந்து கிடந்தது. 'அதற்கு அவசியமில்லே....?? 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கோபால் இதைச் செய்திருப்பார் என்று எண்ணுகிறீர்களா?” *. நோங்கள் எதையுமே, எல்லோரையுமே சந்தேகப்பட வேண்டும். அது தான் போலீஸ் தர்மம்.’’ கிஜிமாவின் உடலை அன்று மாலே ஸ்கூரா இயக்கத் தலைவர்களின் இறுதி மரியாதைகளுடன், செர்ரி மலர்க் கொத்துகளால் அலங்கரித்து, உப்புத் தூள் தூவி, மெளன ஊர்வலமாக எடுத்துச் சென்று, புனித ஜப்பான் மண்ணிலே புதைத்து முப்பத்தாறு மணி நேரமாகியும் அயாகோவின் விசும்பல் அடங்கவில்லை. தேன் தாயின் மரணத்துக்கு யார் காரணம்? தற்கொலேயா? கோபாலா? ஸ்கூரா இயக்கத்தின் எதிரிகளா? கோபால் ஏன் ஒடி மறைய வேண்டும்? எங்கே போயிருப்பான்? அயாகோ டெலிபோனேச் சுழற்றிப் போலிஸைக் கூப்பிட்டாள். - போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்.” *ஏதாவது துப்பு கிடைத்ததா? - *இதுவரை எந்த விவரமும் தெரிய வில்ல. இன்வெஸ்ட்டிகேஷ்&னத் தீவிர மாக்கியிருக்கிருேம். எப்படியும் கண்டு பிடித்து விடுவோம்.’ ரிஸிவரை வைத்தாள். வைத்த மறு விடிையே மணி அடித்தது. எடுத்த போது அயாகோவின் கண்கள் வியப்பில் விரிந்தன. கோபாலின் குரல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/23&oldid=768615" இலிருந்து மீள்விக்கப்பட்டது