பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 82 حجصلإح காதலும் பெருங்காதலும் “எம்பியும்யானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடை தெர்டுக்குமோ, நீ உனது பெண் மையால் இவ்வாறு கூறுகிறாய்” 'உழைத்தவல் இருவினைக்கு ஊறு காண்கிலாது அழைத்தயர் உலகினுக்கு, அறத்தின் ஆறெலாம் இழைத்தவற்கு, இயல்பல இயம்பி என் செய்தாய்! பிழைத்தனை பாவி உன் பெண்மையால்” என்றான் பெண்மையால் இப்பிழையைச் செய்துள்ளாய் என்று வாலி கூறுகிறான். இங்கு பெண்மை. என்பது பேதமை என்னும் பொருளில் அறியாமை என்னும் பொருளில் வாலி குறிப்பிடுகிறான். பெண்களைப் பற்றி பெண்மையைப் பற்றி இராமாயணப் பெருங்கதையில் வரும் ஒவ்வொரு பெரும் பாத்திரமும் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை அவ்வப்போது கம்பன் மிகவும் துல்லியமாக எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். இல்லறம் துறந்த நம்பி இராமனுக்குச் சீதை மீது அளவற்ற அன்பும் காதலும் நிறைந்து இருந்தது. அது தெய்வீகக் காதலாகும். ஆயினும் மனிதப் பிறப்பில் ஏற்படும் பல பலவீனங்களும் இராமனிடம் வெளிப்படுவதைக் கம்ப காவியம் காட்டுகிறது. இராமனுடைய அம்பு வாலியின் மார்பில் பாய்கிறது. வாலிக்கு இராமனைப் பற்றிய கருத்து மிக உயர்ந்ததாக இருந்தது. அறநெறிகளையெல்லாம் அறிந்தவன், அருளின் ஆழியான் இருமை நோக்குறும் இயல்பினன், ஏற்ற பேர் உலகெல்லாம் ஏய்தியவன் தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் தம்பியர் அல்லது தனக்கு வேறு இல்லை என்று எண்ணி ஏய்ந்தவன், என்றெல்லாம் இராமனைப் பற்றிப் பெருமையாகக் கருதியிருந்தவன். இப்போது தன் மார்பில் தைத்திருக்கும் அம்பு இராமபிரானுடையது என்று கண்ட போது 'இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள் வில்லறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல்நூல் சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை நல்லறம் துறந்தது என்னா'நகைவர நாண் உட்கொண்டான். 'எண் உற்றாய், என் செய்தாய்' என்று கேட்கிறான்.