பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 87 'மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்; என்றல் சங்கையின்றி உணர்தி! வாலி செய்கையால் சாலும்; இன்னும் அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் எங்களில் காண்டி அன்றே! இதனின் வேறு உறுதி உண்டோ?” என்றும் குறிப்பிடுகிறார். இது ஒரு மிக முக்கியமான கருத்தாகும். வாய்மை தவறாத அறிவில் சிறந்த அமைச்சர்கள், தீமைகள் இல்லாத, ஒழுக்கங்களோடு கூடிய, வலிமையான, போர்த் திறம் கொண்ட வீரர்கள் துணையுடன், தூய்மையான நட்புறவு கொண்டு ஆட்சி நடத்த வேண்டும், என்றும், புகையுள்ள இடத்தில் நெருப்பு இருக்கும் என்பதை உலகம் அறியும். கற்றறிந்த நூலோர்களின் ஆலோசனைகளை அறிவுரைகளைப் பெற வேண்டும், பகை உணர்வு கொண்ட எண்ணங்கள் உடையவர்களி டமும் நகை முகத்தோடு அணுகி நல்லுரை வழங்கப் பழக வேண்டும், செய்யும் பணிகள் எதிலும் தீயனவற்றைச் சிந்தித்தல் கூடாது, எத்தகைய இன்னல்கள் வந்தாலும் வசை மொழி இல்லாமல் இனியவைகளையே கூற வேண்டும், உண்மைகளையே வழங்க வேண்டும், உயர்வான செயல்களையே செய்ய வேண்டும், எவரையும் அவர் சிறியவர் என்று கருதி அவர்களைத் துன்புறுத்திவிடக் கூடாது, என்றெல்லாம் பல அறிவுரைகளும் கூந்) மேலும். மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்களு மரணம் என்பதைச் சந்தேகமில்லாமல் உணர்வாயாக, அதை வாலி பால் கண்டாய் அத்துடன் அந்த மங்கையர்களாலே தான் எங்களுக்குத துன்பமும் பழியும் ஏற்பட்டுள்ளன என்பதையும் நீ கண்டாய், அதிலும் சந்தேகம் இல்லை, என்று மங்கையர் பால் பெருங்காதல் கொள்வதால் ஆட்சிப் பொருப்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் வரம்பு மீறி பெண்ணாட்டம் கொள்வதால் எற்படும் துன்பங்களையும் இன்னல்களையும் அபாயங்களையும் எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்கிறார் இன்னும், “நாயகன் அல்லன், நம்மை நனி பயந்து எடுத்து நல்கும் தாய் என இனிது பேணித் தாங்குதி, தாங்குவாரை, ஆயது தன்மையேனும் அறவரம்பு இகவா வண்ணம் தீயன வந்த போது சுடுதியால் தீமையோரை' என்று ஆட்சி செய்யும் அரசன் மக்களை அதிகாரம் செலுத்தும் நாயகனாக அல்லாமல் மக்களையெல்லாம் பெற்ற தாய் போல அரவணைத்து அன்பு காட்டி, பேணிக்காக்க வேண்டும்.