பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 89 'வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை, வீர செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி” என்றாள்; அய்ய நீ! ஆழி வேந்தன் அடியிணை பிரிகலாதாய் எய்தியது என்னை? என்றாள் இசையினும் இனிய சொல்லாள்' என்று தாரை கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு கம்பன் தாரையை “இசையினும் இனிய சொல்லாள்” என்ற குறிப்பிடுகிறர். தாரை மிகுந்த பொது அறிவு நிரம்பியவள். மிகவும் அடக்கமானவள். அன்று சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைத்த போது தாரை வாலியை இடை மறித்துப் போருக்குப் போக வேண்டாம், சுக்கிரீவனுக்கு இராமன் என்பவர் துணைக்கு வந்திருப்பதாக எனக்கு வேண்டியவர்கள் சொன்னார்கள் என்று நயமாக எடுத்துக் கூறியதைக் கண்டோம். இப்போது சீறிவந்த இலக்குவனுக்கு முன்பாக வந்து நிற்கிறாள் 'வினே கடுரத்துடன், கடுங்கோபத்துடன் ஏன் வந்துள்ளீர்கள்’ வந்த செய்தி என்ன? என்று அமைதியாகக் கேட்டு, ஆழ் வேந்தனான இராமபிரானைத் தனியாக ஏன் விட்டு வந்தீர்கள்’’ என்று கேட்கிறாள். இவ்வாறு கூறிவந்து எதிரில் நின்ற தாரையை இலக்குவன் நேருக்கு நேராகக் காண்கிறான். இதற்கு முன் இலக்குவன் தாரையைப் பார்த்ததில்லை. அவளை யார் என்று அவனுக்குத் தெரியாது. 'இவ்வாறு பேசும் இவள் யார்’ என்று இலக்குவன் எண்ணுகிறான். அவளைப் பார்த்தவுடன் அவனுடைய சீற்றம் தணிகிறது. அவனுடைய உள்ளத்தில் கருணை தோன்றுகிறது. அவளுடைய தோற்றத்தைக் கண்டபோது இலக்குவனுக்குத் தனது தாய்மார்களின் நினைவு வந்தது. தனது தாயாரின் வடிவத்தைத் தாரையின் முகத்தில் கண்டான், 'ஆர்கொலோ உரை செய்தார் என்று அருள் வரச், சீற்றம் அஃகா, பார்குலாம் முழுவெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும் ஏர்குலாம் முகத்தினாளை, இறை முகம் எடுத்து நோக்கித் தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். இலக்குவன் தாரையை நேரில் கண்ட போது அவளுடைய தோற்றம் அவனுக்குத் தன் தாயரை நினைவுபடுத்தியது. கணவனை இழந்த பெண்கள் கைமை நோன்பு கொள்வது நமது பாரதப் பாரம்பரிய தர்மங்களிள் ஒன்று மற்றும் உடன் கட்டை ஏறுவதும் நமது மரபுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால் அது