பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் ኧ “காண்பார்க்கும் காணப்படும் பொருட்கும் கண்ணாகிப் பூண்பாய் போல் நிற்றியாய்! யாதொன்றும் பூணாதாய்! மாண்பால் உலகை வயிற்றொழித்து வாங்குதியால்! ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ?” “ஆதிப்பிரமனும் நீ! ஆதிப்பரமனும் நீ! ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ! சோதி நீ சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ என்று வேதம் உரை செய்தால் வெள்.காரோ வேறுள்ளார்!” “நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள்? உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ? என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் பின் செல்வது இல்லாப் பெரும் செல்வம் நீ தந்தாய்!” "மாயப் பிறவி மயல் நீக்கி மாசிலாக் காயத்தை நல்கித் துயரின் கரையேற்றிப் பே யொத்த பேதைப் பிணக்கறுத்த எம்பெருமான்! நா யொத்தேன் என்ன நலம் இழைத்தேன் நான் என்றான்” என்று கூறுகிறார். இவ்வாறு பலரும் இராமனுடைய பெருமைகளைக் கூறுகிறார்கள். வாலி மீது இராமன் தனது கணையைச் செலுத்தினான். வாலி சோர்ந்து கீழே விழுந்தான். வாலி தனது மார்பிலே தைத்துள்ள அம்பைப் பிடித்து இழுத்து அதில் உள்ள பெயரைக் கண்டான். 'மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். இலங்கையில் அனுமனை, இந்திர சித்தன் நான் முகன் படையால் கட்டி இராவணன் சபைக்கு இழுத்துச் சென்று அங்கு நிறுத்தினான். இராவணன் அனுமனை அதட்டி நீ யார்? இங்கு வந்த காரணம்