பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் X1 என்ன? உன்னை இங்கு அனுப்பியவர் யார். என்று கேட்டபோது அனுமன் “வில்லி தன் துதன் யான்’ என்று பதில் கூறி இராமனைப் பற்றிப் பேசுகிறார். H 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர்மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்திச் சூலமும், திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்' என்றும், 'அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச், செந்நெறி செலுத்தித், தீயோர் இறந்து உகநூறித், தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், பொன்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்’ என்றும் சிறப்புறக் கூறுகிறார். இராமனுக்கும் இராவணனுக்கும் இறுதிப் போர் நடைபெறுகிறது. இராமனையும் இலக்குவனையும் வெறும் மனிதர் என்றும், குரங்கு களைத் திரட்டிப் போருக்கு வந்துள்ளனர் என்றும் ஆரம்ப முதல் இகழ்ச்சியாகவே பேசி வந்த இராவணன், நேருக்கு நேராக இராம இலக்குவர்களைப் போர்க்களத்தில் சந்தித்த போது அவர்களுடைய வீரத்தையும் ஆற்றலையும் அவர்களுடைய ஆயுதங்களின் வலுவையும் நேரில் கண்டான். இராவணனுக்கும் இராமனுக்கும் நேருக்கு நேரான போர் நடை பெறுகிறது. இராவணன் தனது சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அனைத்தையும் இராமன் மீது ஏவினான். அவையனைத்தும் பயனற்றுப் போயின. இராவணன் மாயக் கணையை ஏவியபோது இராமன் ஞானக் கணையை ஏவி அதைத் தடுத்தான். இராவணன் தனதுச் சக்தி மிக்க சூலப்படையை ஏவினான். அது இராமனுடைய மார்பிலே பட்டுப் பொடிப் பொடியாக உதிர்ந்து போயிற்று. அப்போது இராவணனுக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டு இந்த இராமன் யார் என்று சிந்தித்தான். 'சிவனோ அல்லன், நான் முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன், இவனோ தான் அவ்வேத முதற்காரணன்? என்றான்.