பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் X11 'யாரேனும் தான் ஆகுக, யான் என் தனியாண்மை பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்; நேரே செல்வேன்; கொல்லும்; அரக்கன் நிமிர்வெய்தி வேரே நிற்கும் மீள்கிலேன் என்னாவிடல் உற்றான்” என்று இராவணன் கூறியதைக் கம்பன் மிகவும் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு இராவணனே இராமனைப் பற்றி “இவனோதான் அவ்வேத முதற்காரணன்' என்று கூறுகிறான். இவ்வாறு இராமனைப் பற்றிப் பல இடங்களிலும் சிறப்பாக எல்லையில்லாத ஒரு பரம் பொருளாகக் கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறு தான் கம்ப நாடர் எந்தப் பொருளை எடுத்தாலும் அதன் உச்சத்திற்கே சென்று அதன் முழுமையான மெய்ப்பொருளை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். அனுமனைப் பற்றி மிக அற்புதமாகப் பேசுகிறார். அனுமன் கடலைத் தாண்டி, இலங்கைக்குள் சென்று, சீதையைக் கண்டு விட்டு, அரக்கர்களுடன் போரிட்டு, அக்கனைக் கொன்று, இந்திர சித்தனுடைய நான்முகன் படைக்குக் கட்டுப்பட்டு இராவணனை சந்தித்துப் பேசித் துதுக் கூறிவிட்டு, இராமனிடம் திரும்பிவந்து, இலங்கையில் சீதையைக் கண்டதன் அடையாளமாக சீதை கொடுத்த சூளா மணியை இராமனிடம் சேர்ப்பித்தான். ஆஞ்சநேயனுடைய இந்த அற்புதமான செயல்களைக் கம்பன் பாராட்டாமல் இருக்க முடியுமா? வைத்தன்பின் துகிலின் வைத்த மாமணிக்கு அரசை வாங்கிக் கைத்தலத்து இனிதின் ஈ ந்தான்; தாமரைக் கண்கள் ஆர வித்தக காண்டி! என்று கொடுத்தனன் வேத நன்னூல் உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். ‘'வேத நன்னூல் உய்த்துளகால மெல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்’ என்று அனுமனை உச்சத்திற்குக் கொண்டு சென்று கம்பன் பாராட்டுகிறார். அனுமன் செய்துள்ள அற்புதமான ஆற்றல் மிக்க செயல்களுக் கெல்லாம் அவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா? ஆஞ்சநேயனுடைய இரண்டாவது அருஞ்செயல் பெருஞ்செயல் அவர் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து போரில் மடிந்த வானரப் படைகளையும், இருமுறை இலக்குவனையும் உயிர் எழுப்பியதாகும். அனுமனைப் பாராட்டிக் கம்ப நாடன் கூறுகிறார்.