பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 13O ※=>- காதலும் பெருங்காதலும் சீதை கூறிய செய்திகள் அனுமனிடம் சீதை சூடாமணியை அடையாளமாகக் கொடுத்துச் சில செய்திகளையும் சொல்லி அனுப்புகிறாள். இன்னும் ஒரு மாதம் வரை உயிருடன் இருப்பேன். என் மீது தயை இல்லாவிட்டாலும் தன் வீரம் காத்தல் வேண்டும் என வேண்டுவாய். என்னைச் சிறை மீட்க வேண்டிய கடமை இளையவருக்கும் உள்ளதையும் அவர்களிடம் கூறுவாய். என்னை வந்து கரம் பற்றிய போது, இந்தப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று செவ்வரம் தந்த வார்த்தையை அவருடைய செவிகளில் சாற்றுவாய். நான் இங்கிருந்து மடிந்து என் உயிர் போய் விட்டாலும் மீண்டும் வந்து பிறந்து தன் மேனியைத் தீண்டுமாறு வரம் வேண்டினாள் என்று விளம்புவாய். “தன்னை நோக்கி உலகம் தளர்வதற்கும், அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும் இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே என்னை நோக்கியிங்கு எங்ங்ணம் எய்துமோ? அது சாத்தியமில்லை. எனவே எந்தை தாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என் வந்தனை விளம்புதி; கவியின் மன்னனைச் சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப் போய் அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய்” என்றெல்லாம் மிக்க வேதனைப்பட்டு சீதை கூறுகிறாள். அதைக் கேட்ட அனுமன் அன்னையே கவலை வேண்டாம். அரக்கர்கள் உயிர் வாழ மாட்டர்கள். வில்லிகள் பொய்க்க மாட்டர்கள். சானகியின் கற்பின் நெருப்பு இலங்கையை எரிக்கும். உன்னைக் காமக் கண்ணால் நோக்கிய அரக்கனின் அக் கண்களைக் காக்கைகள் கொத்தித் தின்பதை நீ காணப் போகிறாய். “தீர்த்தனும், கவிக்குலத்து இறையும், தேவி நின் வார்த்தை கேட்டு உவப்ப தன்முன்னர், மாக்கடல் துர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து மாக்குரங்கு ஆர்த்தன கேட்டு உவந்து இருத்தி, அன்னை நீ”