பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 134 تحخاصحاح காதலும் பெருங்காதலும் வில்லிதன் தூதன்யான், இலங்கை வந்தேன், "அனையவன் யார் என் அறிதி ஆதியேல் முனைவரும், அமரரும், மூவர் தேவரும் எனையவர் எனையவர் யாவர், யாவையும் நிறைவரும் இருவினை முடிக்க நின்றுளோன்.' என்று குறிப்பிட்டான் தொடர்ந்து இராம பிரானுடைய பெருமைகளை எடுத்துக் கூறினான். 'ஈட்டிய வலியும், மேல்நாள் இயற்றிய தவமும், யாணர்க் கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல்வரமும், கொட்பும் தீட்டிய வாழ்வும் எய்தத் திருத்திய பிறவும் எல்லாம் நீட்டிய பகழி ஒன்றால் முதலொடும் நீக்க நின்றான்” “தேவரும் பிறரும் அல்லன்; திசைக்களிறு அல்லன், திக்கின் காவலர் அல்லன், ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்; மூவரும் அல்லன்; மற்றை முனி வரும் அல்லன்; எல்லைப் புவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் ஆவான்” “போதமும், பொருந்து கேள்விப் புரை அறு பயனும், பொய்தீர் மாதவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும் முற்றும் யாது அவன் நினைத்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின், வேதமும் அறனும் சொல்லும், மெய் அறமூர்த்தி வில்லோன்” “காரண கேட்டி ஆயின், கடையிலா மறையின் கண்ணும் ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் போர் அணங்கு இடங்கர் கவ்வப் பொது நின்று, முதலே என்ற வாரணம் காக்க வந்தான், அமரரைக் காக்க வந்தான்” 'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்திச் சூலமும் திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்'