பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 135 'அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நேறி செலுத்தித் தீயோர் இறந்துக நூறித், தக்கொர் இடர்துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்” என்றும் "அன்னவர்க்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன்’ என்றும் இராமன் பெருமைகளைக் விரிவுபட எடுத்துக் கூறி அனுமன் து.ாதுவனுக்குரிய கடமையாக, மிகவும் அடக்கத்துடன் தான் வந்த காரியத்தை மிகவும் நுட்பமாக அரக்கனிடம் எடுத்துக் கூறுகிறான். தேவியைத் தேடித் தென் திசை நோக்கி வந்தோம். எங்கள் தலைவன் வாலிமகன் அங்கதன் அவனுயை துரதனாக நான் இங்கு வந்தேன் என்று கூறுகிறான். இராவணன் நகைத்து வாலி சேய்விடுத்ததுத! வன் திறல் ஆய வாலி வலியன் கொல், அவனுடைய அரசியல் வாழ்க்கை நன்று கொல்’’ என்று அரசனுக்குரிய முறையில் இராஜதந்திரமான கேள்வியைக் கேட்கிறான். அனுமனும் அரசியல் நுட்பத்துடன் “நீ அஞ்ச வேண்டாம். வாலி மறைந்து விட்டான். அவன் இனி மீள மாட்டான். அவனுடைய வாலும் இல்லை. இராமபிரானுடைய கணையால் அடிபட்டு இறந்தான். இப்போது எங்கள் அரசன் சுக்கிரீவன்’ என்று அனுமன் கூறினான். இங்கு வாலியையும் வல்லமை மிக்க வாலியின் வாலைப் பற்றியும் இராவணனுக்கு அனுமன் நினைவூட்டுகிறான். அப்போது இராவணன் அந்த இராமன் வாலியை என்ன காரணத்தினால் அம்பெய்து உண்டான். அந்த இராமன் இப்போது எங்கிருக்கிறான்? அவனுடைய தேவியைத் தேடி நீங்கள் ஏன் வந்தீர்கள். அதன் விவரம் என்ன? என்று கேட்டான். அதற்கு அனுமன் - “தனது தேவியைத் தேடி வந்த இராமன், சுக்கிரீவனுடன் நட்பு கொண்டு, வாலியைக் கொன்று அவனுடைய அருந்துயர் துடைத்து, கோவியல் செல்வமும் தன் உருமையும் கொடுத்து உதவினான். எங்கள் மன்னன் சுக்கிரீவனுடைய ஆணையின்படி நாங்கள் சீதையைத் தேடி வந்தோம்’ என்று பதிலளித்தான். இராவணன் கேட்டான் 'வாலி உம் குலத் தலைவன் ஒப்பிலா உயர்ச்சியோன். அவனைக் கொன்றவருக்கு அடிமைத் தொழில்