பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 136 செய்ய வந்துள்ளிர்களே! அது இகழ்ச்சிக்குரியதாகு மன்றோ! அதற்கு இசைந்து வந்துள்ளிர்கள் என்றால் அது பெண் தன்மை கொண்ட தல்லவா? பேடித்தனமானதல்லவா? “தனது முன்னவனைக் கொல்வித்து அவ்வாறு கொன்றவனிடம் அன்பு செலுத்தி வரும், உம் இனத்தலைவன் ஏவ, எப்படி நீ தூது வந்தாய். அதற்கு உனக்கு என்ன தகுதி’ என்று கேட்டான். இங்கு தன்னிடம் துது வருவதற்கு அனுமனுக்கு என்ன தகுதி என்னும் தன்னகங்கார கம்பீர நிலையிலிருந்தே இராவணன் பேசுகிறான். மானிடரையும் வானரர்களையும் அற்பமாகவே அரக்கர்கள் கருதிக் கொண்டிருந்தனர். இந்த நிலைகளையெல்லாம் அனுமன் துதுவன் என்னும் முறையில் நன்கு புரிந்து கொண்டு சிந்தித்தான். இராவணன் சொன்ன வார்த்தைகளை யெல்லாம் இணைத்துப் பார்த்துச் சிந்தித்து அனுமன், பொதுவான நீதியை உணர்த்தினால் போதும்’ என்று கருதி இராவணனிடம் நேருக்கு நேராகப் பேசினான். அரச நீதியை நீங்கள் சரியாக நிறைவேற்றவில்லை. துய்மையான கற்பினாளுக்கு நீங்கள் தீங்கு செய்ததால் அழிந்து போவீர்கள். பாவத்தால் புண்ணியத்தை அழிக்க முடியாது. முறைகெட்ட காமச் செருக்கினால் மதியிழந்து அறத்தை மறந்து தவறு செய்கின்றீர்கள். அதனால் நீங்கள் அழிந்து போவீர்கள்.” “திறம் திறம்பி காமச் செருக்கினால் மறந்து, தத்தம் மதியின் மயங்கினார், இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் அறம் திறம்பினர் ஆர்உளர் ஆயினார்?” 'பொருளும், காமமும் என்று இவை போக்கி, வேறு இருள் உண்டாம் என எண்ணலர், ஈதலும் அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஒர் தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்’ “இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து, பழி படு உம் கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ?”