பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 163 24. இன்று போய் போருக்கு நாளை வா யுகப் போர் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இராம இராவண யுத்தம் இலங்கைக் களத்தில் தொடங்கியது. அந்தப் போர்க்களக் காட்சிகளைக் கம்பநாடர் மிக அற்புதமாக விளக்கிக் கூறுகிறார். இராவணனே நேரடியாகப் போருக்கு எழுந்தான். முதல் நாள் போர் உக்கிரமாக நடந்தது. இராமனும் போர்க் கோலம் பூண்டான். அன்றைய போர்க்களக் காட்சியைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் மிகச் சிறப்பாகச் சித்தரித்துக் காட்டுகிறார். வானரர்களுக்கும் அரக்கர்களுக்கும் கடும் போர் நடைபெற்றது. போர்க்களம் முழுவதும் சிவப் பேரியது. அரக்கர் படையில் பெரும் சேதங்கள் எற்பட்டன. சுக்கிரீவன், நீலன், அங்கதன் மாருதி முதலிய வானரத் தலைவர்கள் கடும் போர் புரிந்து அரக்கர் படைகளைக் கலக்கினர். இராவணன் போர்க் களத்திற்கு வருகிறான் என்பதை அறிந்த இராமன் “வாங்கினென் சீதையை என்னும் வன்மையால், தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற விங்கின ஆரியன் வீரத்தோள்களே” என்று கூறும் படியான வேகத்துடன் போர்க் கோலம் பூண்டான் என்பதாகக் கம்பநாடர் கூறுகிறார். சுக்கிரீவன், மாருதி ஆகியோர் இராவணனுடன் கடும்போர் புரிந்து சோர்வடைந்தனர். இலக்குவன் புகுந்து இராவணனை எதிர்த்துக் கடும் போர் புரிந்தான். இராவணன் இலக்குவனுடைய அம்புகளைத் தடுத்து அவனுடைய அம்புப் புட்டியை அறுத்தான். உடனே மாருதி தலையிட்டு அரக்கனுடன் மற்போர் புரிந்தான். மாருதியால் குத்துண்ட இராவணன் தள்ளாடினான். இராவணனும் மாருதியின் மார்பில் பலமாகக் குத்தினான். மாருதியும் தள்ளாடினான். மீண்டும் இலக்குவன் தலையிட்டு நீண்ட நேரம் இராவணனை எதிர்த்துக் கடும்போர் செய்தான். இராவணன் இலக்குவ னுடைய போர்த் திறனைக் கண்டு ஆச்சரியப்பட்டான். தானும் மேகநாதனும் தான் அவனுடைய போர்த் திறனுக்கு சமமானவர்கள் என்று கருதினான். விற் போரில் இலக்குவனை வீழ்த்த முடியாது என்று அறிந்த இராவணன் தனது மிக வலுவான ஒரு வேற் படையை இலக்குவன் மீது ஏவினான். அந்த சக்தி ஆயுதத்தினால் தாக் குண்டு இலக்குவன் சாய்ந்தான். மாருதி தலையிட்டு இலக்கு வனைத் துக்கிச் சென்று விட்டான்.