பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 170 X->==== காதலும் பெருங்காதலும் கும்பகருணன் ஆரம்பம் முதலே இராவணன் சீதையின் பால் வைத்துள்ள ஆசைப் பெருங்காதலையும், அதற்காக அவளைக் கவர்ந்து வந்த செயலையும் மறுத்தே பேசி வந்துள்ளான். ஆயினும் கடைசியில் அண்ணனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்று விடுகிறான். இப்போது அண்ணனின் ஆணையின்படி போர்க் களத்திற்குச் செல்கிறான். கும்பகருணன் பெரும்படையுடன் போர்க்களத்தை நோக்கி வருகிறான். இவன் யார் என்று வீடணனிடம் இராமன் கேட்கிறான். 'ஆழியாய் இவன் ஆகுவான், ஏழைவாழ்வுடை எம் முனோன், தாழ்விலா ஒரு தம்பியோன், ஊழிநாளும் உறங்குவான்' என்று கூறி அத்துடன் இவன், ‘'நீ செய்வது தருமம் அல்ல, இதனால் உனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று இன்னும் பல நல்லுரைகள் கூறியும் இராவணனுக்கு உணர்த்திப் பார்த்தான். இராவணன் கேட்கவில்லை. இருப்பினும் தன் அண்ணனுக்காக உயிர் விடுவதற்குப் போர்க்களத்திற்கு வந்திருக்கிறான்” என்று வீடணன் இராமனிடம் கூறுகிறான். 'மறுத்த தம்முனை வாய்மையால் ஒறுத்தும் ஆவது உணர்த்தினான், வெறுத்தும் மாள்வது மெய் எனா இறுத்து நின் எதிர் எய்தினான்' என்று கும்பகருணன் போர்க்களத்துக்கு வந்துள்ளது பற்றி வீடணன் குறிப்பிடுகிறான். போர்க்களத்தில் வந்து நின்ற கும்பகருணனிடம் வீடணன் சென்று தன்னுடன் இராமனிடம் வந்துவிடும்படி கேட்டான், அவன் அதை மறுத்து அவ்வீடணனிடம் நீ ஏன் இராமனை விட்டு என்னிடம் வந்தாய், பிறர் மனை நோக்கும் எங்களிடம் உறவு கொள்ளலாமா? சாதியின் புன்மையை இன்னும் நீ தவிர்ந்திலையோ என்று கூறி உச்சி மோந்து அவனைத் திருப்பி அனுப்பிவிடுகிறான். போர்க் களத்தில் வீடணன் கும்பகருணன் சந்திப்பு ஒரு அற்புதமான காட்சியாகும். இலங்கை சகோதரர்களில் வீடணனும் கும்பக ருணனும் தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.