பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசினிவாசன் 175 வம்புஇட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி, அம்பிட்டுத்துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு, ஐய! கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்’ என்று கும்பகருணன் தன் நிலையை மேலும் தெளிவுபட i_ணனிடம் எடுத்துக் கூறிவிட்டு நீ விரைவில் இராமனிடம் செல்வாயாக என்று கூறித் தம்பியை அனுப்பி விட்டான். வீடணனும் தமையனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு திரும்பினான். வீடணன் இராமனிடம் திரும்பி வந்து சொல்வதெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறவில்லை சிறிதும் குலத்துமானம் தீர்ந்திலன்' 'எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய்! உய்திறன் உடையாற்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் பெய்திறன் எல்லாம் பெய்து பேசினேன்; பெயரும் தன்மை செய்திலன்; குலத்து மானம் தீர்த்திலன் சிறிதும், என்றான்” இங்கு தர்மத்தின் பால் கும்பகருணன், வீடணன் ஆகிய இருவரின் நிலைபாடுகளையும் தெளிவாகக் காண்கிறோம். கும்பகருணன் வீரப்போர் இராமன் தம்பி இலக்குவனுக்கும் இராவணன் தம்பி கும்பகருணனுக்கும் இடையில் கடும் போர் நடைபெறுகிறது. அப்போது கும்பகருணன் இலக்குவனிடம் ஒரு கேள்வியை விடுக்கிறான். எம்முடன் பிறந்தவள் ஒரு பெண் கொடி, அவள் ஒரு தவறும் செய்யவில்லை. ஆயினும் அவளுடைய கூந்தலைத் தொட்டு இழுத்தாய். அந்தக் கையைக் கிடத்துவேன்' என்று கும்பகருணன், இலக்குவனிடம் கூறுகிறான். இங்கு ஒரு குற்றமும் இல்லாமல் அதற்கான தண்டனையும் பெற்ற ஒரு நுட்பமான கருத்து முன்வைக்கப்படுகிறது.