பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 192 >}=== காதலும் பெருங்காதலும் “தாதைக்கும் சடாயுவான தந்தைக்கும் தமியள் ஆய சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது ஒருவன் தீமை பேதைப்பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழையிலாத காதல் தம்பியர்க்கும் ஊருக்கும், நாட்டிற்கும் காட்டிற்று அன்றே!” என்று கூறி இராமன் மனம் வருந்தினான். அப்போது வீடணன் 'பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்த போது முத்திறத்து உலகும் வெந்து, சாம்பராய் முடியும் அன்றே! இத்திறம் ஆன தேனும், அயோத்தி மேல் போனவார்த்தை சித்திரம்; இதனையெல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்' என்று கூறி “சற்று பொறுங்கள் நான் போய்ச் சீதையைக் கண்டு வருகிறேன்” என்றும் கூறி ஒரு வண்டு வடிவில் இலங்கைக்குள் சென்று உண்மை நிலையைக் கண்டறிந்து திரும்பினான். 'இருந்தனள் தேவி; யானே எதிர்ந்தனன் கண்களால்; நம் அருந்ததி கற்பினாளுக்கு அழிவுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான்” அவனை யாகம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும். வேள்வியைச் சிதைக்க வேண்டும். இளவலோடு நானும் மாருதியும் செல்கிறோம். விடை கொடுங்கள்’’ என்று வீடணன் கூற இராமனும் நல்லது சென்று வாருங்கள் என்று விடையும் தந்தான். அத்துடன் இராமன் இலக்குவனுக்கு பல புதிய தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களையும் படைக்கலன்களையும் கொடுத்து உத்திகளும் கூறி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவைத்தான். இலக்குவனும் வீடணனும், மாருதியும் மற்றும் வாணர வீரர்கள் சிலரும் நிகும்பலைக்குச் சென்றனர். இந்திர சித்தன் செய்த யாகத்தைச் சிதைத்தனர். விடணன் தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கருதி இந்திரசித்தன் அவனை இகழ்ந்து பேசினான்.