பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཟཟཟ--། ། கம்பநாடன் காவியத்தில் 198 الحجخيصحح காதலும் பெருங்காதலும் "சொல்லி யென்பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து தோளில் புல்லிய பகழி வாங்கிப் போர்த் தொழில் சிரமம் போக்கி, எல்லியும் கழித்து என்னா எழுந்தனன், எழுந்து பேழ்வாய் வல்லியம் முனிந்தால் அன்னான் வருகதேர் விரைவில் என்றான்” போர்க்களத்தில் மேக நாதன் கடும் போர் செய்தான். இலக்குவன் அவனுடைய அம்புக் கூட்டை உடைத்து அவனுடைய தேர்ச் சாரதியை அழித்தான். பின்னர் இந்திர சித்தன் தானே தேரை ஒட்டிக் கொண்டு தன் உடம்பிலே பதிந்திருந்த அம்புகளைப் பிடுங்கி அவற்றைத் தனது வில்லிலே தொடுத்துப் போர் புரிந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். கடைசியில் இலக்குவன் இறையவன் இராமன் பெயருடைய தெய்வீகக் கணையை மேகநாதன் மீது ஏவினான். பிறை வடிவிலான முறையைக் கொண்ட அக்கனை இந்திரசித்தன் சிரத்தைத் தள்ளியது. “மறைகளே தேறத்தக்க, வேதியர் வணங்கற்பால இறையவன் இராமன் என்னும் நல்அற மூர்த்தி என்னின், பிறை எயிற்று இவனைக் கோறி! என்று ஒரு பிறைவாய் வாளி நிறை உற வாங்கி விட்டான் உலகெலாம் நிறுத்தி நின்றான்” "நேமியும், குலிச வேலும் நெற்றியின் நேரும்புக் கண்ணான் நாம வேல்தானும், மற்றை நான் முகன் கடையும் நாணத் தீ முகம் கதுவ ஓடிச் சென்று அவன் சிரத்தைத் தள்ளிப் பூ மழை வானோர் சிந்தப் போலிந்தது அப்பகழிப் புத்தேன்” என்று கம்பநாடன் கவிதை குறிப்பிடுகிறது. இராமன் இளையவனைப் பாராட்டினான் 'கம்ப மதத்துக காளியானைக் காவல் சனகன் பெற்றெடுத்த கொம்பும், என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்,