பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 'என்னும் மாத்திரத்து ஏறு அமர்க் கடவுளும் இசைத்தான் உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய்! முன்னை ஆதியாம் மூர்த்தி நீ! மூவகை உலகின் அன்னை சீதையாம் மாதுநின் மார்பின் வந்து அமைந்தாள்' 213 என்று சிவபெருமான் கூறியது பற்றியும் கம்பநாடர் எடுத்துக் கூறுகிறார். வானத்திலிருந்து இரங்கி வந்து தசரதன் இராமனைக் கட்டித் தழுவியும் இலக்குவனைப் புகழ்ந்தும் சீதைக்கும் ஆறுதல் கூறி, 'நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்குக் நாட்ட அங்கி புக்கிடு என்று உரைத்தது, அது மனத்து அடையேல் சங்கை உற்றவர் தேறுவது உண்டு; அது சரதம், கங்கைநாடு உடையக் கணவனை முனிவுறக் கருதேல்.” “பொன்னைத் தீயிடைப் பெய்வது, அப்பொன்னுடைத் துய்மை தன்னைக் காட்டுதற்கு என்பது மனக் கொளல் தகுதி; உன்னைக் காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் பின்னைக் காட்டுதற்கு அரியது என்று எண்ணி, அப்பெரியோன்' “பெண் பிறந்தவர் அருந்ததி யேமுதற் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! மண் பிறந்தகம் உனக்கு; நீ வானின்று வந்தாய்! எண்பு இறந்தநின் குணங்களுக்கு இனி இழுக்கு இலை, யால்” என்று சீதையைப் புகழ்ந்து அப்பெரியோன் பேசினான். அதன் பின் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். இராமனும் சீதையும் இலக்குவனும் வீடணனும், அனுமனும், வானரத் தலைவர்களும் விமானம் ஏறி நந்தியம் பதியை அடைந்தனர். விமானம் புறப்பட்டுச் செல்லும் போது இராமன் சீதைக்கு இலங்கையைச் சுட்டிக் காட்டினான். இராவணனும் இந்திர சித்தனும் இறந்த இடத்தைக் காட்டினான். சேதுவைக் காட்டி அதன் பெருமைகளை விளக்கினான். சேது மிகவும் புண்ணியமான இடம்.

  • கங்கையே, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா, சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும், இங்கிதின் எதிர்ந்ததோர் புன்மை யாவையும் நீக்கும் அன்றே!” என்று இராமபிரான் கூறுகிறார்.