பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 257 பின்னர் இராமனும் இலக்குவனும் அடுத்துச் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி உறுதி செய்து கொண்டனர். சடாயுவின் சடலத்திற்கு ஈமக்கடன்களை முடித்தனர். பின்னர் இருவரும் சீதையைத் தேடிக் கொண்டுத் தெற்கு நோக்கி நடந்தனர். பம்பைப் பொய்கை இராமனும் இலக்குவனும் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றனர் பல இடர்களையும் கடந்து சபரியின் இருப்பிடம் சேர்ந்தனர். பின்னர் சபரி கூறிய அடையாளங்களை வைத்து மேலும் சென்றனர். பம்பைப் பொய்கையை அடைந்தனர். இராமன் சீதையின் நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தான். இலக்குவன் தன் அண்ணனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டே யிருந்தான். இருவரும் சேர்ந்தே நடந்து போய் பம்பைப் பொய்கையில் நீராடி, நாட்கடன்களை முடித்துக் கொண்டு அச்சோலையில் இரவு தங்கியிருந்து விட்டு மறுநாள் காலையில் சீதையைத் தேடிக் கொண்டு மேலும் தெற்கு நோக்கிச் சென்றனர். இராமனும் சுக்கிரீவனும் இராமனும் இலக்குவனும் அனுமனையும் சுக்கிரீவனையும் சந்தித்தனர். இராமனும் சுக்கிரீவனும் நட்புக் கொண்டனர். ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வது என்று உடன்படிக்கைச் செய்து கொண்டனர். இராவணன் சீதையை வான வெளியில் தூக்கிக் கொண்டுச் சென்ற போது சீதைத் தனது சில அணிகலன்களை கீழே எரிந்து சென்றிருக்கிறாள் அவ்வணிகலன்களை வானரர்கள் சிலர் எடுத்து வைத்திருந்தனர். அவைகளைச் சுக்கிரீவன் இராமனுக்குக் காட்டினான். அவைகளைக் கண்டவுடன் சீதையின் நினைவாக இராமன் கலங்கினான். சக்கிரீவன் இராமனுடைய துயரத்தைத் தணிக்கும் முறையில் அவனுக்கு ஆறுதல் கூறினான். தாங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுடைய வில்லின் ஆற்றல் வலிதாகும். 'திருமகள் அனைய அத்தெய்வக் கற்பினாள் வெருவரச் செய்துள வெய்யவன் புயம் இருபதும், ஈரைந்து தலையும் ஏவின் உன் ஒரு கண்ைக்கு ஆற்றுமோ? உலகம் ஏழுமே?”