பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 258 > }=== காதலும் பெருங்காதலும் எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனது சிறு குறை தீர்ந்தவுடன் சானகியை மீட்பதற்கான பணிகளைத் தொடங்கலாம், என்றான். இராமன் நான் எனது கைகளில் வலுவான வில்லும் கணைகளும் கொண்டு நான் உயிருடன் இருக்கும் போதே சீதைத் தனது அணிகலன்களைக் கழித்தனள். இது போல், 'விலங்கு எழில் தோளினாய்! வினையினேனும் இவ் இலங்குவில் கரத்தினன் இருக்கவே, அவள் கலன் கழித்தனள், இது கற்பு மேவிய பொலன் குழைத் தெரிவையர் புரிந்து ளோர்கள் யார்? சீதைக்கு அந்தக் கதி ஏற்பட்டு விட்டதே என்று வருந்தினான். மாருதி இராமனை வணங்கி, 'கொடும் திறல் வாலியைக் கொன்று, கோமகன் கடும் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர் நெடும்படை கூட்டினால் அன்றி, நேடரிது அடும் படை அரக்கர்தம் இருக்கை; ஆணையாய்!” என்று கூறி அனைவரும் வாலி இருக்கும் இடத்திற்குச் சென்றனர். இராமனும் வாலியும் இராமனுடைய ஏற்பாட்டின் படி சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைத்து இருவரும் மோதிப் போர் செய்து கொண்டிருந்த போது இராமன் வாலி மீது அம்பெய்து அவனுடைய வலுவை வீழ்த்தினான். வாலி தன் மீது தைத்துள்ள கணை இராமனுடையது என்று அறிந்தான். இராமனைப் பழித்தான். இங்கு இராமனுக்கும் வாலிக்குமிடையில் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது. அந்த உரையாடல் மிகவும் நுட்பமானது. இக்காட்சி இராமாயணப் பெருங்காவியத்தில் மிகவும் சிறப்பானதொரு காட்சியாகும். இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த வாக்குவாதத்தில். "தாரம் மற்றொரு வன்கொளத் தன்கையில் பாரவெம் சிலை வீரம் பழுதுற; நேரும் அன்று மறைந்து நிராயுதன் மார்பில் எய்ய வோ வில் இகல்வல்லதோ? என்று இராமனிடம் வாலி கேட்கிறான்.