பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் |69 எம்பி பரதன் துங்க மாமுடி சூடுகின்றான் என்று கூறுகிறான்”. பங்கமில் குணத்து எம்பி பரதன் என்று இராமன் வாயால் கூறப்படுகிறான். இன்னும் கோசலை சிறப்பாக நிறைகுணத்தவன், நின்னிலும் நல்லவன், குறைவிலன்” என்று பரதனைப்பற்றிக் கூறுகிறாள் என்பதையும் கண்டோம். மேலும் இராமன் சிறந்த தம்பி திருவுற எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன். என்று கூறும் போது பரதனை “சிறந்த தம்பி’ என்று குறிப்பிடு -வதையும் காண்கிறோம். பரதனைப் பற்றி ஆயிரம் இராமருக்கு ஈடாவாய் என்றும் உங்கள் மரபினோர் புகழ்களெல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் என்றும் உயர் குணத்து உரவுத்தோளாய் என்றெல்லாம் கதையில் போற்றப்படுவதைக் காண்கிறோம். " தாய் உரைகொண்டு, தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரி யினம்மா !” என்பதும், என்புகழ்கின்றது ஏழைஎயினனேன் இரவி யென்பான் தன் புகழ்க்கற்றை, மற்றைஒளிகளைத் தவிர்க்குமா போல் மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்களெல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்” என்பதும் கம்பனுடைய சிறந்த கருத்து மிக்க கவிதைகளாகும்.