பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

äldlow −305 &CDossills LTT600 - 9. சினிவாசன் 24| “அனுமன் மிக்க வல்லமையுள்ளவன். அவனை உனது தனுவைப் போல் நினைத்துக் கொள். எனது தம்பியை உனது தம்பியாக நினைத்துக் கொள். மற்ற வானரர்களையெல்லாம் உனது துணைவர்களாகக் கருதிக்கொள்”என்றுவாலி சகோதரத்தன்மையின் இரத்த பாசத்தின் மெய்யான வடிவத்தை வெளிப்படுத்திப் பேசுகிறான். அதன் பின்னர் வாலி தன்னருகில் இருந்த சுக்கிரீவனைக் கை நீட்டி அழைத்துத் தழுவிக் கொண்டான். “மைந்தனே நீ வருந்தாதே, கவலைப் படாதே. நீ பலகோடி நன்மைகளைப் பெறுவாய், இராமநாமம் ஒன்று போதும் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்” என்று தன் தம்பிக்குப் பரிவுடன் அறிவுரைகளையும் கூறுகிறான். 'வஞ்சகமும் தீமைகளும் கணக்கில்லாமல் செய்தவர்கள் கூட இராமனுடைய கணை பட்டால் அறிவுத் தெளிவு பெற்று வானுயர் நிலையை எய்துவர் என்றால் உனக்கு இராமனடி சேர்ந்ததால் ஒரு குறையுமில்லை. செருக்குடைய செயல்களையும் அறியாமையையும் கைவிட்டு இராமன் செய்த உதவியை நினைத்து அவன் பணிக்கும் வேலைகளனைத்தையும் சிதைவில்லாமல் செய்வாயாக’ என்றும் “அரசியல் பதவி பாரத்தினால் மகிழ்ந்து செய்ய வேண்டிய வேலைகளை மறந்து விடாதே, ஆட்சி அதிகாரம் என்பது நெருப்பைப் போன்றதாகும். நன்றாகச் சிந்தித்துச் செயல்படு. சிறுகுற்றம் குறைகளும் கூடுமானவரை இல்லாமல் பார்த்துக் கொள் என்றெல்லாம் தம்பிக்கு அறிவுரை கூறி இராமனை நோக்கி “மன்னவர்க்கு அரசன் மைந்த மாற்றிலன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம்’ என்று கூறி முடித்தான். தன் மகன் அங்குதன்ை அழைத்து என்னுயிர்க்கு இறுதி செய்தான் என்பதை/சிறிதும் எண்ணாது உன்னுயிர்க்கு உறுதி செய்தி” என்று கூறி மேலும் பல அறிவுரைகளையும் எடுத்துரைத்து, இராமனிடம் இவன் உன் அடைக்கலம் என்று கூறி அனைவரிடமும் விடைபெற்று வானுலகு அடைந்தான் என்பதைக் கம்பன் மிக அருமையாக நெஞ்சைத் தொடும்படி எடுத்துக் கூறுகிறார். வாலி இந்த கட்டத்தில் மிகுந்த அறிவுத் தெளிவுடன் சகோதர வாஞ்சையையும் மனிதாபிமான உணர்வையும் அரச நீதியையும் நடப்பு நெறிகளையும் தன் சொந்த அனுபவத்தின் மூலம் கிடைத்த படிப்பினைகளிலிருந்தும் எடுத்துக் கூறுகிறான். கிட்கிந்தையின் சகோதரத்துவம் மிகவும் உயர்வான நிலையை எட்டி நிறைவு