பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

colausor - od5 oportuu Lmano - 2. oontonreroñr 265 கண்களில் நீர் பொங்கக் குருதி தேங்கத் தம்பியை வழியனுப்பி வைத்ததையும் கம்பன் குறிப்பிடுகிறார். கும்பகருணன் பெரும் படைகளுடன் போர்க் களத்தில் புகுந்தான். இவன் யார் என்று இராமன் வீடணனிடம் வினவினான். "ஆழியான் இவன் ஆகுவான் ஏழை வாழ்வுடை எம்முனோன் தாழ்விலா ஒரு தம்பியோன் ஊழி நாளும் உறங்குவான்’ என்று “தாழ்விலாத் தம்பி” என்று குறிப்பிட்டு வீடணன் கூறுகிறான். “தம்முடைய செயல்கள் தர்மத்தின் பாற்பட்டதல்லவென்றும், அதனால் உயிர் மாயும் என்றும் இடிபோன்ற இராவணனுக்கு இருமுறைக்கு மேலும் எடுத்துக் கூறினான். அதை மறுத்த அண்ணனை உண்மை உரைகளாலும் கண்டித்தும், அவனுக்கு நன்மை யாவதையும் உணர்த்திப் பார்த்தான். அவன் கேட்கவில்லை. அதில் வெறுத்துப்போய் தான் சாவது உறுதியென்று புரிந்து கொண்டே உன் எதிரில் வந்து நிற்கிறான். “தர்மம் அன்று இதுதான் இதால் வரும் நமக்கு உயிர் மாய்வு எனா உருமின் வெய்ய வனுக்கு உரை இருமை மேலும் இயம்பினான்” "மறுத்த தம் முனை வாய்மையால் ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் வெறுத்தும் மாள்வது மெய் எனா இறுத்து நின் எதிரில் எய்தினான்” என்று வீடணன் தனது சிறிய அண்ணன் கும்பகருணனைப் பற்றிக் குறிப்பிட்டான். வீடணனுடைய இந்த வார்த்தைகளில் அவனுடைய அண்ணன் கும்பகருணன் மீது அவனுக்கு இருக்கும் பரிவும் பாசமும் அடிநாதமாக இருப்பதைக் காண முடிகிறது.