பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


15 தது (152 of 1925). அங்குக் கூத்தாடக் கடவார் சிலர் இருந்தனர். முடிப்புரை இசை நாடகங்கள் எந்த அளவு மக்கள் ஆதரவும் அரசர் ஆதரவும் பெற்றிருந்தன என்பதைக் குறித்து மேம்போக்காகக் கல்லெழுத்துக் குறிப்புக்களைக் கண்டா லும் அறிந்து கொள்ளலாம். ஆடலாசிரியர்கள் மிகவும் சிறப்பிக்கப் பெற்றிருந்தனர்; ஆடவரும் பெண்டிரும் ஆடல் பாடல்களிற் சிறந்து விளங்கினர்; இவர்கள் முத்தமிழிலும் வல்லுநராய் இருந்தனர்; அரசர் அவர்களது நடிப்புக்களைக் கண்டு மகிழ்ந்தனர்; பெண்பாலார்க்குத் தலேக்கோற் பட்டமும் ஆண்பாலார்க்கு நிருத்தப் பேரரையன், மாராயன் முதலிய பட்டங்களும் அளிக்கப் பெற்றன. அவர்களுடைய கலையைப் புகழ்ந்து அவர்கள் பெயரை ஊருக்கு இட்டு வழங்கினர்; கூத்து ஒன்றுக்கு 2. கல நெல் சன்மானமாக அளிக்கப் பெற்றது; சில சமயங்களில் ஆண்டுச் சம்பளமும் கொடுக்கப் பெற்றது. ஆண்டொன்றுக்கு இத்தனைக் கூத்து ஆடவேண்டு மென்று இருப்பினும், பிற சமயங்களில் அவ்வாட லாசிரியர் வேறு இடங்களில் தம் தொழில் திறனைக் காட்டிப் பொருளிட்டலாம்; திருப்பதிகங்களும் சத்துவம் தோன்ற நடித்துப் பாடப் பெற்றன; கூத்துவல்லார் மக்களிடையே பெருமதிப்புடன் விளங்கினர்; நட்டுவநிலை அல்லது நட்டுவக்காணி கொடுக்கப் பெற்றுப் பரம்பரை யாக அநுபவித்தனர். இத்தகைய செய்திகளால் நாகரிகக் கலைகள் தமிழகத்துப் போற்றப் பெற்றமை அறிந்து மகிழ்வோமாக !