பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


17 வேரும் மருந்தாகிப் பயன்படுதலைத் தெரிவிக்கும். பல்லவர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய மூலிகைகளேப் பயிரிட அரசாங்கத்தாரிடமிருந்து உரிமைபெற வேண்டி யிருந்தது. செங்கொடி என்பது மிகச் சிறந்த மருந்துக் கொடி. இது பல வகை நோய்களைப் போக்கவல்லது. இதஜனப் பயிரிடுவோர் "செங்கொடிக்காணம்' என்ற வரிசெலுத்தினர். கருசராங்கண்ணி பல நோய்களேத் தீர்க்கவல்லது. இதைப் பயிரிடவும் “கண்ணிட்டுக் கானம்' என்ற வரி செலுத்த வேண்டியிருந்தது. * சுந்தரசோழவிண்ணகர் ஆதுலர்சாலை இது குந்தவையாரால்? தன் தந்தை முதல் இராச ராசன் நினைவாகத் தஞ்சாவூரில் அமைக்கப்பெற்ற இலவச மருத்துவ சா8ல. பண்டாரவாடையிலுள்ள முதலாம் இராசேந்திரனின் 3ஆம் ஆண்டுக் கல்லெழுத்து ஒன்று இவ் வாதுலர்சாலையை நடத்துவதற்காக, 70 காசு கொடுத்து 9 மா நிலம் இறையிலியாக வாங்கிய செய்தி யைக் குறிப்பிடுகின்றது. இம் மருத்துவ நிலையத்தில் இருந்த வைத்தியர் 'சவர்ணன் அரையன் மதுராந்தகன்' என்ற பெயருடையவர். இம் மருத்துவ சாலைக்கு விடப்பெற்ற வைத்தியபோகம் போதாமை கண்டு இக் குந்தவையார் இன்னும் மனைகள் வாங்கி இம்மருத்துவ சாலக்கு அளித்ததாகவும், முன் அளித்த நிலத்தையும் 1. இராசமாணிக்கம்-பல்லவர் வரலாறு-பக்கம் 23 4-5. 2. முதல் ராசராசனின் தமக்கையார் ; இவரைப் பற்றிய விரிவான வரலாற்றைக் குமரகுருபரன்’ மலர் 8, இதழ் l, பக்கம் 82-70 இல் காண்க. 3. 248 of 1923. 2