பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


62 எமக்கு மங்களமாகும்; எல்லாத் தேசத்தவர்களும் நலமடைவார்களாக! (6-57-2). தீ, நீர், செடி, கொடி இவற்றுள் இருக்கின்றவனும், எல்லாப் புவனங்களின் பிராணிகளையும் ஆக்கிக் காத் தழிப்பதில் வல்லுநனுமாகிய அக்கினி வடிவ ருத்திர னுக்கு வணக்கம் (7-61-1). யசுர்வேத சதருத்ரீயம் எசுர் வேதத்தில் சதருத்ரீயம் என்ற பகுதி உருத்திர பரமேசுவரனை நேரே கூறும் பகுதியாகும். இதனை எசுர் வேதிகள் பெரிதும் பாராட்டுவர். இது எசுர் வேதத்தில், நான்காம் காண்டத்தில், ஐந்தாம் பிரபாடகத்தில், பதி னுெரு அநுவாகங்களாக உள்ளது. இதில் உருத்திர மந்திரங்கள் நூருயிருத்தல்பற்றிச் சதருத்ரீயம் எனப் பெற்றது என்பர் சிலர். இது உருத்திராத்யாயம் எனவும் கூறப்படும். சதருத்ரீயச் சிறப்பு: ‘'தேவர்களுள் உருத்திர மகேசுவரனைப் போலவும், புராணங்களுள் கந்தபுராணம் போலவும், மிருதிகளுள் மனுமிருதியைப் போலவும், வேதத்தில் சதருத்ரியம் சிறந்து விளங்குகின்றது” என்று வித்யாரண்ய முனிவர் உருத்திரகல்பம் என்ற நூலுள் கூறியுள்ளார். கைவல்ய உபநிடதம், “ எதை ஜபித்தால் முத்தியாம்? யாக்யவல்கியர் ! கூறுவாயாக; சதருத்ரீயத் தால் முத்தியாம் ' என்றும், “ எவன் சதருத்ரீயத்தை ஒதுகின்றனே அவன் அக்கினி புனிதன் ஆகின்ருன் :

  • இஃது எங்ங்ணம் பொருந்தும் என்பது புலப்படவில்லை.