பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு #37

கங்கள் சட்டெனக் கண்ணுக்குப் படு மளவுக்கு வந்து விட்டன.

‘வருடத்துக்கு நாலுயறி. பறிக்கு திகரம் ஐந்நூறு நிக்கி. இன்னிக்கு இந்த ஊரிலே பத்து குவாய்க்குப் பஞ்ச மில்லாமே போகும்’ .

‘முத்தையா, மெய்யாவா சொல்றே?”

“பின்னே என்ன, உன்னோடு சீட்டு வெச்சு விளையா றேனா?

“அப்படி யென்ன அவசரம் உனக்கு, திடீர்னு:”

‘வந்துட்டுதப்பா. செந்தாமரைக்கு ரெண்டு மாதங்களா உடம்பு சொகமில்லே, வாந்தியெடுக்குது. உணவு வயித்திலே தக்கல்லே. நீ தமுட்டுச் சிரிப்புச் சிரிக்காதே. நீ கிரிக்கிற வாந்தியில்லே, டாக்டர் கிஷ்ண சாமி பாக்கறார். கொஞ்சம் முன் கோபிதான். ஆனால் கஸ்டம் தெரிஞ்சவர். நேத்து மாலைதான் செந்தா மரையை வீட்டுக்கனுப்பிச்சிட்டு என்னை மட்டும் நிறுத்திக்கிட்டு மண்டையிலே .ெ வ டி கு எண் ைட ப் போட்டாரு.

‘முத்தையா உன் சம்சாரத்துக்கு உடம்பு நல்லா யில்லை’

முளிச்சேன்’

நல்லாவேயில்லே’

அதுக்குத்தானே ஐயா ஊசி போட்டாவுது’

‘பத்தாது மவனே, பெரிய இடத்து சமாச்சாரம் ஆயிட்டு வரது போட்டோ எடுக்கணும். என் வைத்யம் உதவாது தனிப் புள்ளி பாக்கனும், வேலூருக்குப் போவணுமோ என்னவோ ? எல்லாத்துக்கும் தயாராயிரு. எனக்கென்னவோ தென்பாயில்லே. அவகிட்ட இம்ப விவரம் சொல்லாதே பைத்தியக்காரா. ஆனால் மருந்து பாக்கறவன் நீ தானே ஆனைக்குத் தீனி போடற மாதிரி