பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

ஆனால் ஆள் உட்காரவில்லை. “நீ யார்? எங்கிருந்து வந்தே” எங்கள் முதல் சந்திப்பிலேயே அதட்டலா? இல்லை இதுதான் இவன் சுபாவமா? என்னை விடப் பதினஞ்சு வயசேனும் மூத்தவன் என்கிற உரிமையா?

‘அதைத் தான் ந - ன் இ ன் ன மு ம் யோசிச் சிட்டிருக்கேன்’

“அப்படின்னா? நேர்க் கேள்விக்கு நேர்ப்பதில்,”, :போலிஸ் கேள்வியா?”

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான். “அப்படித் தான் வெச்சுக்கோயேன்”

‘நான் எல்லாருக்கும் அம்பி, அதோ மோகாம்பரித் மலைப்பக்கத்தில் மலையான் பட்டிக் கிராமத்திலிருந்து வந்தேன். எனக்கு அப்பன் ஆயி கிடையாது. நான் தருமத் துக்கு வளர்த்தெடுத்த பிள்ளை. அட்ரெஸ் இல்லாதவன், பிழைப்பைத்தேடி வீட்டைவிட்டு ஓடி வந்தவன். பிழைக்க வந்தவன். உன் மாமன்-’’

‘உங்களை'ன்னு சொல்லு”'உன் மாமனது தென்னந் தோப்பில் இதோ இதே மரத்தில் ஏறி இளநீர் திருடினேன்”

“அதுக்குத்தான் உன்னை எல்லாரும் தலையில் தூக்கி வெச்சிட்டுக் கரகம் ஆட றாங்களா?”

‘அதை அவங்களை விசாரி’ “என்ன தம்பி நான் சொல்லிக் கொடுத்ததும் மரி யாதை மில்லாமே நீ போடுறே?”

“எல்லாம் நீ சொல்லிக் கொடுத்தது தான். இப்போ இவனிடம் ஒரு அடி பின்வாங்கினால் கூடக் கோட்டையை விட்டுடுவேன். மரியாதை இல்லே. Oneway Traffic நீ கொடுத்ததைத் தானே திரும்பி வாங்க முடியும்!”