பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கொண்ட வழக்கு வெற்றியடையுமாறு நீதி வழங்கினர் நீதிபதி.

காந்தியடிகள் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அவர் கடைப்பிடித்து வந்த சத்தியத்திற்கு ஒரு பெருத்த சோதனை ஏற்பட்டது. திருவாளர் ரஸ்டம்ஜி என்பவர் ஒரு பாரசீக வணிகர்; பெருஞ்செல்வர்; காங்தியடிகளின் உயிர்த்தோழர். தென்னுப்பிரிக்க இந்திய சமுதாயத்தில் பெருமதிப்புப் பெற்றவர். காங்தியடிகள் டர்பன் நகர வீதியில் ஒருமுறை குண்டர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தபோது, தம் இல்லத்தில் அடைக் கலமளித்துக் காப்பாற்றிய பெருமை ரஸ்டம்ஜியையே சாரும்.

ஒருமுறை இந்த கண்பர் பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டார். அவர், தம் உள்ளத்திலுள்ள எந்தச் செய்தி யையும் காந்தியடிகளிடம் மறைப்பது கிடையாது. சாதா ரணக் குடும்பக் காரியங்களுக்குக் கூடக் காந்தியடிகளின் அறிவுரையைக் கேட்பது அவர் வழக்கம். ஆனல் ரஸ்டம்ஜி ஒரு செய்தியை மட்டும் காங்தியாரிடம் சொல்லாமல் நீண்ட நாள் மறைத்து வங்தார். பம்பாயிலிருந்தும் கல்கத்தாவி லிருந்தும் கள்ளத்தனமாகப் பொருள்களைத் தென்னப்பிரிக் காவில் இறக்குமதி செய்யும் வழக்கம் அவருக்குண்டு. அதை மட்டும் அவர் காந்தியாரிடம் கூறியதில்லை. பலநாள் திருடன் ஒருகாள் அகப்படுவது திண்ணம். ரஸ்டம்ஜியும் ஒருநாள் அகப்பட்டுக் கொண்டார். அரசியலாரை ஏமாற். றிய குற்றத்திற்காக டர்பன் நீதிமன்றத்தில் அவர்மேல் வழக்குத்தொடர ஏற்பாடாகி யிருந்தது, ரஸ்டம்ஜி அலறி யடித்துக்கொண்டு காங்தியடிகளிடம் ஒடிவங்தார். இத் துன்பத்திலிருந்து தம்மை எவ்வாறேனும் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

“உங்களேக் காப்பாற்றுவதும், காப்பாற்றாமல் விடு வதும் ஆண்டவன் கையிலிருக்கிறது. என்னுடைய வழி