பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொங்கல் பரிசு

நினைத்தாலும் உள்ளத்திலே ஓர் இன்பக்கிளர்ச்சி மேலோங்குகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னுல் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி. நான் அப்பொழுது– அதாவது 1928ஆம் ஆண்டில்– மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திருவாளர்கள் சி. சுப்பிரமணியம், ஓ. வி. அளகேசன், கே. எஸ். பெரியசாமி, கே. எஸ். பழனிசாமி, ஏ. அளகிரிசாமி, டாக்டர் வ. சி. முத்துசாமி முதலான பலரும் அன்று கல்லூரி மாணவர்கள். நாங்களும் இன்னும் பல கல்லூரி மாணவர்களும் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்துக் கொண்டிருந்தோம். அதன் வாயிலாக, ‘பித்தன்’ என்ற ஒரு திங்கள் இதழை வேளியிட்டோம். நாட்டின் விடுதலையிலும் தமிழின் முன்னேற்றத்திலும் பித்துக்கொண்டவர்கள் நடத்தும் இதழ் ஆகையால் அது பித்தன் என்ற பெயர் தாங்கிற்று. அந்தக் காலத்தில் ‘ஆனந்தபோதினி’ ஒரு மாத இதழ். பேராசியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘ஆனந்தவிகடன்’ அப்பொழுது திங்கள் இதழாகவே இருந்தது. ‘லோகோபகாரி’, ‘நவசக்தி’ வார இதழ்கள். வேறு குறிப்பிடத்தக்க பத்திரிகைகள் இருந்ததாக எனக்கு நினைவில்லை.

பித்தனுக்கு நான் வெளியீட்டாளானாகவும், தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் அச்சிடுபவராகவும் பதிவு செய்துகொண்டு 64 பக்கங்களில் இதழ் வெளியாயிற்று. தொடக்கத்தில் வ. கி. முத்துசாமி பித்தனுக்கு ஆசிரியர். பிறகு நான்கு பேர் கொண்ட ஆசிரியர் கழகம் அமைந்தது. அலுவலகச் செலவோ, வேறு செலவுகளோ இன்றி அதை நடத்தினோம். புது முறையிலே கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எல்லாம் அவற்றில் வெளியாயின. பாலபாரதி, ச. து. அ. யோகியார் ‘பேயன்’ என்ற புனைபெயரில் அதில் கவிதை எழுதினர்: ‘பித்தன்’ இதழ்களைப் பார்த்துவிட்டு