பக்கம்:காலத்தின் குரல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6


கதைகள் நிறைந்த சூழலிலேயே நான் வந்தது கதைகளில் எனக்கு ஒரு இயல்பான ஈடுபாட்டை ഖளர்த்துவிட்டது.என் அம்மா மீனுராசன் மகனுக்கு பொன் உண்டோ? போன்ற நாட்டுப்புற கதைகளையும் பேய் பிசாசு கதைகளையும் சொல்வது வழக்கம். அப்பா பல ரகமான கதைகளையும் சொந்த அனுபவங்களையும் சுவராஸ்யமாக சொல்வது உண்டு. அப்பாவின் சேவகர் களில் ஒரு நாயுடு மந்திர தந்திர கதைகள் புராணக் கதைகளே எல்லாம் சொல்லுவார். 4-ம் வகுப்பு வாத் தியார் ராமசாமி பிள்ளை, கஸ்பியான்கா கதை, பிலிப்லிட்னி கதை போன்ற லட்சிய மாந்தரின் கதைகளை சொல்லி வந்தார். பிறகு புத்தகங்கள் விதம் வித மான கதைகள் சொல்லின.

2-வது பாசம் (ஏழாம் வகுப்பு) படிக்கையிலேயே இது போல் எல்லாம் கதைகள் சொல்ல வேண்டும் என்ற ஆசை என்னுள் வளரலாயிற்று.


1933 முதல் 'ஆனந்த விகடன்’ பத்திரிகை படிக்கக் கிடைத்தது. வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜே. ஆர். ரங்கராஜூ நாவல்கள் என் உள்ளத்தில் கதைத்தினவை தூண்டி வந்தன.

1935-36களில் 'கல்கி'யின் சுவையான கதைகள் பல பிறந்தன. விகடனில் நல்ல கதைகள் வந்து கொண்டு இருந்தன. இலை எல்லாம் நானும் கதை எழுத வேண்டும் என்ற அரிப்பை வளர்த்து வந்தன.

1936-37 ல் வீட்டில் சும்மா இருந்தபோது நசன் கதைகள் எழுதலானேன். 'இதய ஒலி என்று கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினேன்.

1937 ல் மணிக் கொடி வால்யூம்கள் படிக்கக்கிடைத் தன. அவற்றில் இருந்த புதுமைப்பித்தன் கதைகள் என்ன மிகுதியும் வசீகரித்தன. அதுபோன்ற கதை களை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.