பக்கம்:காலத்தின் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20

இரண்டாவது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம், அதுக்குப் பிற்பட்ட வருடங்கள் - ஜனங்களிடம் பணப்புழக்கம் தாராளமாக இருந்தது. பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கக்கூடிய தனிநபர்கள் நாட்டில் அதிகம் இருந்தார்கள். அன்றாட வாழ்க்கைச் சிரமங்கள் - பற்ருக்குறை, ரேஷன், பிளாக் மார்க் கெட் வகையரா - இருக்கவே செய்தன.

அரசியலில், தேசீய விடுதலை இயக்கம் மும்முரமாக இருந்தது காந்தியத்தின் தாக்கம் நாடு நெடுகிலும் பரவி இருந்தது. சமூகப் பிரச்னைகள் - சாதி, தீண்டாமை, கள்குடி, விதவை மறுமணம், தாசி ஒழிப்பு போன்றவை - சீர்திருத்த நோக்கில் பிரசாரம் செய்யப்பட்டு வந்த காலம்.

இவற்றை 'கல்கி' ஓரளவுக்கு தன் எழுத்துக்களில் பிரதிபலித்திருக்கிறாா். ராஜாஜி இந்நோக்கத்துட னேயே கதைகள் எழுதிக் கொண்டிருந்தார் ஆனால், 'மறுமலர்ச்சி இலக்கிய வாதிகள்’ என்று சொல்லிக் கொண்ட ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்' இவற்றுக்கு இலக்கியத்தில் இடம் தேவையில்லை என்று கருதினர். பாரதி பாடல்களில் கூட, தேசீய கீதங்கள் இலக்கியம் ஆகா என ஒதுக்கினர். நானும் 'மணிக்கொடி எழுத்தாளர்கள் வழியையே பின்பற்றினேன்.

சிவசு:

உங்களின் ஆரம்ப காலத்திய சக எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

வ.க:
‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ எனக்கு முந்திய தலை முறையினர். புதுமைப் பித்தனை நான் 1943-ல் முதன் முதலில் சந்தித்தேன் பிறகு பல தடவைகள்