பக்கம்:காலத்தின் குரல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஆசிரியர் நே: க்கும் போக்கும் இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லை. அவர் பழமையை பெரிதும் போற்றுபவராகவும், (மணிக்கொடிக் காரர்களோடு இலக்கியம் நின்றுவிட்டது என்று கருதும் மனுேபாவம் ஒரு உதாரணம்), புதுமையை திறமையை ஏற்று அங்கீகரிக்கும் இயல்பு இல்லாதவராகவும் இருந்த தஞல், எழுத்து நல்ல முறையில் வளர இடமில்லாது போயிற்று. அதனுலேயே, அவரோடு ஒத்துழைக்க முன் வந்தவர்கள் பிறகு "நடை" என்ற காலாண்டு ஏட்டை துவங்க நேர்ந்தது. "நடை" நின்ற பிறகு ‘கசட தபற’ பிறக்க தேர்ந்தது. முன்பிருந்த சிறு பத் திரிகைகள், இப்போதுள்ளவை இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்னென்ன? இக்காலத்தியப் போக்கு எங்ங்னம் உள்ளது? தமிழுக்கு எந்த வகையில் பயன்படும்? முன்பு சிறு பத்திரிகைகள் தனி இலக்கிய நோக்கு மட்டுமே கொண்டு செயல்பட்டன. படைப்பு முயற்சி களை வரவேற்று வளர்த்தன. பிறகு, விமர்சனப் பார்வை கொண்ட பத்திரிகைகள் வந்தன கலேயிலும் ஆர்வம் காட்டின. அடுத்து, புதுமுறை நாடகங்களில் உற்சாகம் காட்டிய சிறு பத்திரிகைகள், சிறு கதை. கவிதைகளோடு நவீன நாடக வளர்ச்சிக்குப் பாடுபட ஆசைப்பட்டன. அதே சமயத்தில், சமுதாயம் அரசியல் கொள்கை களை வலியுறுத்தும், மார்க்சீயப் பார்வை கொண்ட ஏடுகளும் தோன்றலாயின. இந்நோக்கிலும், தீவிரமும் தனித்தன்மை காட்டுகின்றன. சில பத்திரிகைகள்.