பக்கம்:காலத்தின் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? அப்படியானல், விமர்சனத்தின் நிலைதான் என்ன? படைப்புகளின் தன்மையை ஒரு நோக்கில் எடுத்துச் சொல்கிறது விமர்சனம்; விமர்சகனின் படிப்பறிவை யும் பார்வையையும் புலப்படுத்துகிறது. ரசனையை வளர்க்கத் துணை புரியவும் கூடும் வசு: சிவசு: சிவசு: சாகித்ய அகாடமி பரிசினுல் உங்கள் பாதையில் ஏற் பட்ட மாறுதல்கள் பற்றிக் கூறுங்கள் மாறுதல் எதுவும் இல்லை. பத்திரிகைகள் மூலம் விளம் பர வெளிச்சம் (பப்ளிசிட்டி) கிட்டியது. பாராட்டு விழாக்கள் பல இடங்களில் நிகழ்ந்தன. இதஞல், அமைதியாக ஒரு இடத்தில் இருந்து, என் விருப்பம் போல் படிக்கவும் எழுதவும் முடியாமல் போச்சு. இப்பொழுது தீபம் பொறுப்பாசிரியர். அதனுல் ஏற் பட்ட அனுபவங்கள்? - 'தீபம்' ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கிறேன். ஆனல், பொறுப்பு எதுவும் கிடையாது. எனவே, பொறுப்பாசிரியர்' என்று சொல்வது சரியல்ல. மாதம் தோறும் தலையங்கமும், எனது குறிப்பேடும் எழுதிக் கொடுக்கிற பொறுப்பு எனக்கு வந்து சேர்ந் திருக்கிறது! மற்றபடி, ஒவ்வொரு இதழிலும் என்ன கதை, கவிதை, இதர விஷயங்கள் வருகின்றன என் பது இதழ் தயாராகி வந்த பிறகு தான் எனக்கும் தெரிய வருகிறது. "ஆசிரியர் குழு அமைப்பு என்பது பத்திரிகைகள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக-அநேக சந்தர்ப்பங் களில், வெறுமனே பெயர் அளவில் மாத்திரம்-ஆக் கிக் கொள்கிற ஒரு செளகரிய ஏற்பாடு. அவ்வளவு தான். - சமூக மாற்றத்திற்கு இலக்கியம் படைப்பவர்களால் என்ன சேவை செய்ய முடியும்?