பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 342


களது எல்லை. ஜெனரல் ஜோசப் ஸ்மித்தால் குறைக்கப்பட்டபொழுது அரசர் கொல்லப்பட்டார். அவருடைய மனைவியும் குழந்தையும் நாட்டிலுள்ள சில முக்கியமானவர்களும் மைசூர் நாட்டிற்குத் தப்பிவிட்டனர். அங்கு அண்மைக்காலப் போர் தொடங்கும்வரை அவர்கள் ஐதர் அலியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் நாடு ஒரு குத்தகைக்காரனால் நிர்வகிக்கப்பட்டது. அமைதியான காலங்களில் நவாபு மகம்மது அலிக்குத் திறை செலுத்துபவர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் காடுகளும் காப்புகளும் நிலைத்திருக்கத் திண்டாடியபோது, கலகம் வந்தால் அதனால் தங்களுக்கு வரக் கூடிய முதன்மையான வாய்ப்புகள் நிரம்பிய இலாபத்தை எண்ணி அவர் களது பற்றற்ற நிலை அச்சமூட்டப்பட்டிருக்கலாம்.

1773 ஆம் ஆண்டே இராமநாதபுரத்தின் எல்லைகள் ஜெனரல் ஜோசப் ஸ்மித்தால் குறைக்கப்பட்டது. அந்தக் காலத்திலிருந்து நாடு முழுவதும் ஆங்கிலேயரிடம் ஒப்புவிக்கப்பட்டவரை இராமநாதபுரத்தில் நவாபினது படைகள் இருந்து வந்தன. 1783 இல் படைத்தலைவன் புல்லர்ட்டன் சிவகங்கை மீது படையெடுத்த போது நாட்டின் ஆட்சி பழமையான குடும்பத்தினரிடமிருந்து வலுவில் கைப்பற்றியவர்களிடம் வந்து சேர்ந்தது. 1773 இல் தலைவர் இறந்தவுடனேயே அவனுடைய அமைச்சர்கள் தற்காப்பிற்காக ஐதர் அலியிடம் ஓடினர். அதன்பின் அவன் கர்நாடகத்தின் மீது படையெடுத்தபொழுது அவனுடன் திரும்பி வந்து அவனது ஆணையின் கீழ் நாட்டை ஆட்சி செய்து கம்பெனி, நவாபு ஆகிய இருவர்களுடைய எல்லைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு இருந்தனர். நவாபுக்கு எதிராகப் பலமுறை ஆயுதந்தாங்கினர். ஆனால் அடிக்கடி வெற்றிகரமாக மன்னிப்பையும் பெற்றனர்.

படைத் தலைவன் புல்லர்ட்டன் (Fullarton) கூறுகிறார்

எஞ்சியிருந்த படைகளுடன் ஆகஸ்டு 4 ஆம் தேதி கிழக்கே இருபது மைல் தொலைவிலுள்ள சிவகங்கைக்குப் படையெடுத்துச் சென்றோம். சிறிய மறவர் நாட்டை ஆண்டு வந்த இரண்டு மருதுகளும் தங்களது குழந்தை அரசருடன் காளையார் கோயில் காட்டுக்குள் விரைவாகத் தப்பிச் சென்று விட்டார். அங்கு 10,000 பேர்களடங்கிய படையைச் சேர்த்தனர் - (காட்டுக்குள்ளா? - ந.ச.) எந்தக் கட்டுப்பாட்டுக்கும் இயங்கித் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பிவர ஒப்புக் கொண்டனர். எஞ்சியுள்ள கப்பத் தொகையை உடனே கட்டவேண்டியது அன்றி அவர்களுடைய தலைவர்களிடம் அவர்கள் ஆட்கள் கொள்ளையடித்தப் பொருள்களுக்கு ஈடாக 90,000 ரூபாய் இழப்பு ஈடுகொடுக்கும் படியும் இதற்கு அவர்கள் உடன்படவில்லையானால், உடனே அவர்கள்